விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மனத்திலோர் தூய்மை யில்லை*  வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
    சினத்தினால் செற்றம் நோக்கித்*  தீவிளி விளிவன் வாளா,*

    புனத்துழாய் மாலை யானே!*  பொன்னிசூழ் திருவ ரங்கா,*
    எனக்கினிக் கதியென் சொல்லாய்*  என்னையா ளுடைய கோவே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புனம் துழாய் மாலையானே - தண்ணிலததிலே வளர்ந்து செவ்விதான திருத்துழாயை மாலையாக அணிந்துள்ளவனே;
பொன்னி சூழ் திரு அரங்கா - காவேரியாலே சூழப்பட்ட ஸ்ரீரங்கத்தில் சாய்ந்தருள் பவனே;
என்னை ஆள் உடைய கோவே - அடியேனே அடிமையாகக் கொண்ட ஸ்வாமியானவனே;
மனத்தில் - (என்) மநஸ்ஸிலே;
ஓர் தூய்மை இல்லை - தெளிவு கொஞ்சமும் இல்லை;

விளக்க உரை

“குளித்து மூன்றனலையோம்பும்” என்ற பாட்டுத் தொடங்கி ஐந்து பாட்டுகளாலே தம்மிடத்தில் ஒருவித நன்மையும் கிடையாதென்பதை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! உம்மிடத்தில் ஒரு நன்மையும் இல்லையென்றீர்; இருக்கட்டும், ஒருவித நன்மையுமில்லாதாப் போலே ஒருவித தீமையுமில்லா திருந்தாலும் போதும்; அப்படி உண்டோ?” என்று கேட்க; நநிந்திதம் கர்மததஸ்திலோகே ஸஹஸ்ரசோ யந்நமயாவ்ய தாயி” என்ற ஆள வந்தாரைப்போலே என்னிடத்திலில்லாத தீமை உலகத்திலேயே இல்லை! எல்லா வித தீமைகளும் என் பக்கல் சூடிகொண்டிருக்கின்றன வென்கிறார். மனத்தில் ஓர் தூய்மை இல்லை -- காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம் மாத்ஸர்யம் என்று சொல்லப்படும் பல துர்க்குணங்களில் ஒன்றாவது குறைந்தால் கொஞ்சமாவது சித்தசுத்தி ஏற்படும், அப்படியுமில்லை யென்கை.

English Translation

O Fresh Tulasi-garland Lord, Lord of Ponni-surrounded-Tiru-Arangam! O King whom I serve! I have no purity in my heart, no sweetness in my speech. With impotent rage and anxious looks, I have uttered fiery words. What is going to be my fate now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்