- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குரங்குகள் மலையை தூக்கக்* குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
தரங்கநீ ரடைக்க லுற்ற* சலமிலா அணிலம் போலேன்,*
மரங்கள்போல் வலிய நெஞ்சம்* வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே* னயர்க்கின் றேனே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸ்ரீராமாவதாரத்தில் பெருமாள் இலங்கைநகர் எழுந்தருள்வதற்காகக் கடலில் அணை கட்ட நேர்ந்தபோது வாநரவீரர்கள் மலைகளைக் கொணர்ந்து எறிந்து கடலைத் தூர்ப்பதைக் கண்ட அணிற்பிள்ளைகள் ‘இவ்வாநரங்கள் தமது சக்திக்கு இயன்ற காரியத்தைச் செய்து பெருமாள் விஷயத்திலே கிஞ்சித்கரித்தால் நாமும் நமது சக்திக்கு ஏற்றவாறு இப்பெரிய காரியத்திலே சிறது கிஞ்சித்கரிப்போம்’. என்றெண்ணி, எல்லா அணிற்பிள்ளைகளும் கடலிலே முழுகுவது, உடனே அந்த ஈரவுடம்போடே கரைமேல் மணலில் புரண்டு உடலில் ஒட்டிக்கொண்ட மணல்களைக் கடலிலேகொண்டு உதறுவதாய் இப்படிப்பட்ட ஒரு காரியத்திலே ஸேதுபந்தன கைங்கரியத்திற்கு உதவிபுரிந்ததாக ஒரு இதிஹாஸம் உண்டு; அதனை அருளிச்செய்கிறார் முன் இரண்டடிகளில்.
English Translation
Nor am I like the humble squirrel which rolled in the sand and helped, when the monkeys pushed big rocks to build a bridge in the ocean. With a heart full of vice, a heart as hard as wood, infamously I labor, without a single service to the Arangam Lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்