- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
போதெல்லாம் போது கொண்டுன்* பொன்னடி புனைய மாட்டேன்,*
தீதிலா மொழிகள் கொண்டுன்* திருக்குணம் செப்ப மாட்டேன்,*
காதலால் நெஞ்ச மன்பு* கலந்திலே னதுதன் னாலே,*
ஏதிலே னரங்கர்க்கு எல்லே!* எஞ்செய்வான் தோன்றி னேனே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
“கள்ளார் துழாயும் கணவலரும் கூவிளையும், முள்ளார் முளரியும்ஆம்பலும் முன் சண்டக்கால், புள்ளாயோரேனமாய்ப் புக்கிடந்தான் பொன்னடிக்கென்று உள்ளாதா ருள்ளத்தை உள்ளமாக்கொள்ளோமே” என்றபடி கண்ணிற்கண்ட பூக்களைக் கொணர்த்து பெருமாள் திருவடிகளிலே ஸமர்பிக்க வேண்டியது ப்ராப்தமாயிருக்க, அது செய்யமாட்டுகிறிலேன்; இவ்வளவு கஷ்டமும் வேணடா; வாயில்வந்த நாலு சொற்களைச் சொல்லி ஸ்தோத்ரமானது செய்யலாமே; அதுவும் செய்யப் பெற்றிலேன்; அவ்வளவு சிரமமும் வேண்டா; நெஞ்சிலேயாவது சிறிது ஸ்நேஹம் வஹிக்கலாமே; அதுவும் பெற்றிலேன்; இப்படி ஒருவிதத்தாலும் எப்பெருமான் விஷயத்திலே தான் கிஞ்சித்கரிக்கப் பெறாதவனானபின்பு அட்டின் கழுத்தில் முலைக்கும் எனக்கும் ஒரு வாசியில்லை; என்னுடைய பிறவி வீண்! வீண்!! வீண்!!! என்கிறார்.
English Translation
I do not worship your golden feet thrice a day with flowers. I do not sing your glories with faultless words of praise. I do not melt with over-flowing love for you in my heart. I do not have anything for you, Ranga! Alas, I wonder why I was born!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்