- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
குளித்துமூன் றனலை யோம்பும்* குறிகொளந் தணமை தன்னை,*
ஒளித்திட்டே னென்க ணில்லை* நின்கணும் பத்த னல்லேன்,*
களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
அளித்தெனக் கருள்செய் கண்டாய்* அரங்கமா நகரு ளானே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
கர்மயோகம், ஜ்ஞாநயோகம், பக்தியோகம் என்று சாஸ்த்தரங்களில் உபாயமாகக் கூறப்பட்டவற்றை அநுஷ்டிப்பதற்கு ஏற்ற ப்ராஹ்மண்யமிருந்தும் ஐயோ!; எனக்கு ஒன்றிலும் யோக்யதை இல்லையே என்று தமது வறுமையைக் கூறுகின்றார். அக்நிஹோத்ரம் முதலிய தீத்தொழில்களைக் செய்வதற்கு யோக்யதையைக் கொடுப்பது ப்ராஹ்மண்யம் என்பது முதலடைமொழியால் விளங்கும், குறிகொள் என்பதனால் - இந்த ப்ராஹ்மண்யம் மிகவருந்திக்காப்பாற்ற வேண்டிய தென்பது போதரும். ப்ராஹ்மணயோநியிற் பிறந்தவன் எவ்வளவு அக்ருத்யங்கள் செய்தாலும் ப்ராஹ்மணனாகவே இருக்கிறான் என்பது கிடையாதாகையாலும், சாஸ்த்தரங்களிலே பாபங்களைக் கூறும்போது ஜாதிப்ரம்சாபாதக பாபங்கள் (அதாவது ஜாதியில் நின்றும் நழுவச்செய்யவல்ல பாவங்கள்) என்று சில பாதகங்கள் கூறப்பட்டிருத்தலாலும் அப்படிப்பட்ட பாவங்களுக்கு ஆளாகாதபடி ஒழுங்காக இருந்தாலன்றி ப்ராஹ்மண்யம் நிலைத்து நிற்கமாட்டாதாகையால், குறிகொள் எனப்பட்டதென்க.
English Translation
I have forfeited the rights of priesthood; the acts of feeding the three fires are no more min. Nor am I your devoted Bhakta. Alas, what do I have to rave about? Ocean-hued Lord, O Lord of Arangama-nagar, I can only scream, pray grant me your grace.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்