விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கங்கயிற் புனித மாய*  காவிரி நடுவு பாட்டு,*
    பொங்குநீர் பரந்து பாயும்*  பூம்பொழி லரங்கந் தன்னுள்,*

    எங்கள்மா லிறைவ னீசன்*  கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
    எங்ஙனம் மறந்து வாழ்கேன்*  ஏழையே னேழை யேனே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏழையேன் - (எம்பெருமானைக் கிட்டினால் அநுபவிக்க மாட்டாமலும், பிரிந்தால் தரிக்க மாட்டாமலும்) பேதைமைக் குணத்தையுடைய நான்;
கங்கையின் புனிதம் ஆய காவிரி நடுவு பாட்டு - கங்காநதியிற் காட்டிலும் பரிசுத்தியுடையதாகிய காவேரிநதியினது நடுவிடத்திலே;
பொங்கு நீர் - பெரிய கிளர்த்தியோடு வருகின்ற (அந்நதியின்) நீர்ப் பெருக்கு;
பரந்து பாயும் - எங்கும் பரவிப்பாய்தற்கிட மானதும்;
பூ பொழில் - அழகிய சோலைகளையுடையது மாகிய;

விளக்க உரை

பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழிலரங்கம்)கோயிலைக் கிட்டுகின்றோமென்கிற குதூஹத்தினால் பெரிய கிளர்த்திகொண்டு தனது பெருமகிழ்ச்சியெல்லாம் தோற்றுமாறு எங்கும் காவேரிநதி பாய்வதனால் எப்போதும் மலர்கள் மாறாத சோலைகள் சூழ்ந்த பெரிய பெருமாளது ஸெளகுமார்யத்துக்கு அநுகூலமான நீர்வளத்தையும் எப்போதும் இளவேனிற் பருவம்போலத் தோன்றுகிற பூஞ்சோலைகளையுமுடைய ஸ்ரீரங்கம்: இதனால் அத்தேசத்தினது தூய்மையும் .இனிமையும் வெளியாமென்க. இறைவன் என்பது -அவன் ஸகல பதார்த்தங்களுக்கும் தலைவன் என்பதையும்; ஈசன் என்பது –தனது தலைமைக்குத் தகும்படி ஆளவல்ல திறமையுடையவ னென்பதையும் தெரிவிக்கு மென்ப.

English Translation

Our Lord and master reclines in the midst of the Kaveri, holier than the Ganga, whose gushing waters flow over fragrant bowers in Arangam. Having seen his beautiful form, how can I forget him and alive? O Powerless, hopeless me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்