- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நினைக்க முடியாதாகில் வாய்விட்டுப் பேசினாலோவென்ன “மந: பூர்வோ வாகுத்தர:” என்றன்றோ சொல்லியிருப்பது; மநஸ்ஸாலே பரிச்சேதிக்க வொண்ணாத விஷயத்தை பாசுரமிட்டு முடிக்கப் போமோ என்கிறார். பேசமுடியாதென்றால் பேசுவதைவிட்டு விலகி வாய்மூட வேண்டாவோ? பின்னையும் பேசிக்கொண்டே இருக்கிறதென்? என்ன; ஊமையாகப் பிறவாமல் நாலாறு வார்த்தைகள் சொல்லும்படியாகப் பிறந்தோமாதலால், வேதங்களும் வைதிகோத்தமர்களும் சொல்லிப் போன பேச்சுக்களில் ஏதோ சிலவற்றைச் சொல்லிகொண்டிருக்கிறோமே யொழிய, எம்பெருமானுடைய பெருமைகளை யெல்லாம் அறிந்து பேசுகிறபடியன்று என்கிறார் முதலடியில்: “நிற முயர் கோலமும் பேருமுருவு மிவையிவை யென்று, அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலு மங்கங்கெல்லாம், உறவுயர் ஞானச்சுடர்விளக்காய் நின்றதன்றி யொன்றும், பெறமுயன்றா ரில்லையால் எம்பிரான் பெருமையையே” என்ற திருவிருத்தத்தை ஒரு புடை ஒத்திருக்கும் இது. அன்றியே; ”யதோ வாசோ நிவர்த்தந்தே” என்று வேதம் பேசினபடியே நாமும் “எம்பெருமானுடைய பெருமையைப் பேசமுடியாது” என்று பேசுமத்தனையல்லது பெருமை அறியமுடியாது என்றும் பொருள்படும்.
English Translation
Talking the same things again and again, nobody realizes the truly worthy. The Lord does not reveal himself except to those of desire-free heart. Other than worshipping him, -- who resides in the hearts of the pure, - what use talking O Frail heart? You tell me.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்