- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானை ஸேவிக்கப்பெற்றமைக்கு உகந்து உரைத்த ஆழ்வார் , கண்களினுடைய களிப்புக்குப் போக்குவீடான ஆநந்தக் கண்ணீர் பெருகப்பெற்று ஐயோ! இக்கண்ணீர் அரும்பரும்பாகத் துளித்துக் கண்களை மறைத்து எம்பெருமானை இடைவிடாது ஸேவிக்கவொட்டாமல் துடைச்சுவராய்த் தடை செய்கின்றவே ! கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாதொழியும்படி மஹாபாபத்தைப் பண்ணின நான் இந்த துக்கத்திற்கு எங்குபோய் முறையிட்டுக் கொள்வேன் என்று வெறுக்கிறார். பரவை என்று கடலுக்குப் பெயர் ; திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளுகிறவன் திருக்காவிரியிடையிலே வந்து கண்வளர்ந்தருள்வதாக அதுஸந்திக்கிறர் என்னலாம்: அன்றியே, காவேரி தான் ஒரு பெருங்கடல் பெருகுமாபோலே பெருங்வெள்ளங் கோத்துப் புரளுகையாலே காவேரியையே கடலாகச் சொல்லிற்றாகவுமாம் முற்றுவமை.
English Translation
On the waves of the cool Kaveri which lashes sprays of sweet nectar, my Krishna reclines without a peer in Arangam, with lotus eyes and coral lips like a berry. O, what can I do? On seeing him thus, my eyes rain tears, alas!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்