விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விரும்பி நின்று ஏத்த மாட்டேன்*  விதியிலேன் மதியொன்றில்லை,* 
    இரும்புபோல் வலிய நெஞ்சம்*  இறை-இறை உருகும் வண்ணம்,*
    சுரும்புஅமர் சோலை சூழ்ந்த*  அரங்கமா கோயில் கொண்ட,* 
    கரும்பினைக் கண்டு கொண்டு*  என் கண்ணினை களிக்கு மாறே!      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விரும்பி நின்று - ஆதாரத்தோடே ஒருபடிப்பட நின்று;
ஏத்த மாட்டேன் - ஸ்தோத்ரம் பண்ணமாட்டா தவனாயிராநின்றேன்;
விதி இலேன் - (கைகூப்புதல் முதலிய) காயிக வ்யாபாரங்களும் செய்யப்
பெறாதவனாயிரா நின்றேன்;
மதி ஒன்று இல்லை - (‘ஈச்வரன் ஒருவன் உண்டு என்கிற) ஒரு அறிவும் (எனக்கு) இல்லை;

விளக்க உரை

தரித்ரனுக்கு நித்யபாயஸம் கிடைத்தாற்போலே, ஒருவகை யோக்யதையுமில்லாத கல்நெஞ்சனான எனக்கு அழகிய மணவாளன் ஸேவைஸாதிக்கப் பெற்ற பாக்கியத்தை நான் என்னவென்று சொல்லுவேன் என்று தடுமாறுகின்றனர். மனஸ்ஸு, வாக்கு, காயம் என்ற மூன்றுவகை யுறுப்புகளில் ஒன்றினாலும் நான் பகவத்விசயத்தில் அந்வயிக்கப்பெறவில்லை; சிறிது காலமாகிலும் ஒருபடிப்பட நிலைத்துநின்று உண்மையான அன்புடன் ஸ்தோத்ரஞ் செய்யுமவனல்லேனாதலால் வாய் படைத்த பயன் பெற்றிலேன்; (“நின் தலையைத் தாழ்த்து இருகைகூப்பென்றால் கூப்பாது பாழ்த்தவிதி” என்றபடி) ஒரு அஞ்சலியும் நேராகச் செய்யமாட்டாதவனாகையால் காயம் படைத்த பயனும் பெற்றிலேன்; எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப்பற்றி விஸேஷமாகச் சிந்திக்க மாட்டாமற் போனாலும் ‘எம் பெருமான் ஒருவன் உண்டு’ என்று அவனுடைய ஸத்தையையாகிலும் சிந்திக்கலாமே; அதுவும் சிந்தித்திலேனாதலால் மனம் படைத்த பயனும் பெற்றிலேன். இனி மேலாவது மநஸ்ஸைத் திருத்திக்கொள்ளக்கூடுமோ வென்று பார்த்தாலும் அதற்கும் யோக்யதையில்லாதபடி மனம் கல்லாய்க்கிடக்கிறது.

English Translation

I never bowed in worship, never contemplated, never served. My heart was hard as steel, but slowly, bit by bit, he made me melt. The Lord lives in the temple of Arangam surrounded by bee-humming groves. On seeing my sweet-as-sugarcane Lord, O how my eyes rejoice!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்