விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நமனும் முற்கலனும் பேச*  நரகில் நின்றார்கள் கேட்க,* 
    நரகமே சுவர்க்கம் ஆகும்*  நாமங்கள் உடையன் நம்பி,*
    அவனது ஊர் அரங்கம் என்னாது*  அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,* 
    கவலையுள் படுகின்றார் என்று*  அதனுக்கே கவல்கின்றேனே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நமனும் - யமதர்மராஜாவும்;
முற்கலனும் - முத்கலபகவானும் ஒருவர்க்கொருவர்;
பேச - வார்த்தையாடிக்கொண்டிருக்க
நரகில் நின்றார்கள் கேட்க - அந்த வார்த்தை நரகத்திலே பாப பலன்களை அனுபவிக்கிற; பாவிகளின் காதில் பட்டவளவிலே;
நரகமே - அந்த நரகந்தானே;

விளக்க உரை

திருநாமத்தின் பெருமையை நான் அறியாதிருந்தேனாகில் ஸம்ஸாரிகளைப்பற்றிக் கவலைப் படமாட்டேன் மநுஷ்யஜந்மம் எளிதிற் பெறக்கூடுமாயின் நான் கவலைப்படமாட்டேன்; இவர்கள் உஜ்ஜீவநத்திற்காகச் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரியதாயின் கவலைப்படமாட்டேன். திருநாமங்களின் மேன்மையோ சொல்லுந்திரமல்ல பெறுதற்கு அரிதான மானிடஜந்மத்தையோ இவர்கள் பெற்றிருக்கிறார்கள்; இவர்கள் செய்யவேண்டிய காரியமோ மிக அற்புதமானது-‘எம்பெருமான் ஊர் திருவரங்கம்’ என்றிவ்வளவே சொல்லவேண்டுமத்தனை இங்ஙனிருக்கவும் இவர்கள். விஷயாந்தரப் படுகுழியிலே தலைகீழாக விழுந்து வருந்துவர்களாகில் நான் எங்ஙனே கவலைப்படாதிருக்கமுடியும்? இவர்கள் சிறிது திருந்தினராகில் என் அநுபவத்திற்கு எவ்வளவோ துணையாகுமே! என்கிறார்.

English Translation

The inmates of Hell overheard the words exchanged by Yama and Mudgala, and immediately hell became Heaven, -- such is the power of your name, O Lord. Learned men fail and falter, forget that you reside in Arangam, and fall into deep worries. That worries me immensely.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்