- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் அமைந்த சேதநர்கட்கெல்லாம் அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி காரியஞ்செய்பவன் எம்பெருமானாதலால் ராஜஸருடையவும் தாமஸருடையவும் ருசிக்கு ஏற்ப அக்குணங்களுள்ள அம்மன் பிடாரி முதலிய க்ஷுத்ரதேவதைகளை எம்பெருமான்றானே ஒவ்வொரு பேரிட்டு நாட்டினான். “யே ஹ்யந்யதேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயான்விதா:-தேபி மாமேவ கௌந்தேய! யஜந்த்யவிதிபூர்வகம்” என்ற கீதையின்படியும், ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் - ஸர்வ தேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி’ என்ற வசநப்படியும் அந்த க்ஷூத்ரதேவதைகளைக் குறித்துச்செய்யும் வணக்கவழிபாடுகள் யாவும் அத்தேவதைகட்கும் ஆத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடத்திற் போய்ச் சேர்ந்துவிடுமேயன்றி அவர்களுக்கே உரியனவாகமாட்டா. ராஜப்பிரதிநிதிகள் ஒவ்வோரிடங்களிலும் ப்ரஜைகளிடத்தில் பணங்களை (கப்பம்) வசூல் செய்து அவற்றைப் பிரதாந ராஜனிடத்தில் சேர்ப்பது போல வாய்த்து இத்தேவதைகளின் தொழிலும் . “இறுக்குமிறை யிறுத்துண்ண எவ்வுலகுக்கும் தன்மூர்த்தி, நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்றானே” என்றும் “ அவரவர் விதிவழி யடைய நின்றனரே” என்றும் நம்மாழ்வாரு மருளிச்செய்தார்.
English Translation
He planted gods everywhere, then out of goodness and grace, he revealed himself in Tiru-Arangam, as a means for those who seek devotion. Listen to me. O Gracious People! When the Lord with Garuda-mount is here, you go and seek the lowly gods, for favors and fortunes!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்