விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்*  சூழ் பரிவேடமுமாய்ப்* 
  பின்னற் துலங்கும் அரசிலையும்*  பீதகச் சிற்றாடையொடும்* 
  மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்* 
  தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மின்கொடியும் - கொடிமின்னலும்
ஓர் வெண் திங்களும் - அதனோடு சேர்ந்திருப்பதும் களங்கமில்லாததுமான (முழுவதும்) வெண்மையாயுள்ள ஒரு சந்த்ரனும்
சூழ் - (அவ்விரண்டையுஞ்) சுற்றிக் கொண்டிருக்கும்
பரிவேடமும் ஆய் - பரிவேஷத்தையும் போல
பின்னல் - (திருவரையில் சாத்தின) பொற்பின்னலும்

விளக்க உரை

உரை:1

வெண்ணிலவும், அந்நிலவினைச் சூழ்ந்திருக்கின்ற பரிவேடமும் ஆகிய இம்மூன்றும் இணைந்திருக்கின்ற வானத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.பின்னல், துலங்கும் அரசிலை, பீதகச் சிற்றாடை- இடையில் மின்னும் பொன்னாலான அரைஞாண்கயிறு, அதில் கோர்க்கப்பட்ட மிகுந்த பொலிவுடைய தூய வெள்ளியால் செய்த அரசமரத்தின் இலை வடிவிலான ஆபரணம், இடுப்பில் கட்டியுள்ள பட்டுப்பீதாம்பரம் ஆகிய இம்மூன்றனுடன் இணைந்த.மின்னல் ஒளியினால் பொலிவு பெறும் மழைமேகம் போலக், கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் அணிகலனுடனும் தனக்கே உரித்தான தன் திருமேனிப் பொலிவுடன், இவ்வாடை, ஆபரணங்களின் பொலிவும் ஒன்றுகூட இருடீகேசா(ரிஷிகேசா) தளர்நடை நடந்துவா என் அப்பனே.

உரை:2

கொடி மின்னல், பொன்னிற மின்னுகின்ற மின்னல் கீற்றும், முழுமையான குளிர் வெண்ணிலவும், அந்நிலவினைச் சூழ்ந்திருக்கின்ற பரிவேடமும் ஆகிய இம்மூன்றும் இணைந்திருக்கின்ற வானத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.பின்னல், துலங்கும் அரசிலை, பீதகச் சிற்றாடை- இடையில் மின்னும் பொன்னாலான அரைஞாண்கயிறு, அதில் கோர்க்கப்பட்ட மிகுந்த பொலிவுடைய தூய வெள்ளியால் செய்த அரசமரத்தின் இலை வடிவிலான ஆபரணம், இடுப்பில் கட்டியுள்ள பட்டுப்பீதாம்பரம் ஆகிய இம்மூன்றனுடன் இணைந்த.மின்னல் ஒளியினால் பொலிவு பெறும் மழைமேகம் போலக், கழுத்தில் அணிந்துள்ள காறை என்னும் அணிகலனுடனும் தனக்கே உரித்தான தன் திருமேனிப் பொலிவுடன், இவ்வாடை, ஆபரணங்களின் பொலிவும் ஒன்றுகூட இருடீகேசா(ரிஷிகேசா) தளர்நடை நடந்துவா என் அப்பனே.

English Translation

The braided silver waist-thread and silver flag leat over creamy-silk loin-cloth are like a flash of lightning, a big white moon and its halo surrounding it. The golden choker around his neck and the darkness of his frame look like a rain-cloud lit by its lightning. This self-illumined child, Hrisikesa, is he going to come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்