விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெறுப்பொடு சமணர் முண்டர்*  விதியில் சாக்கியர்கள்,*  நின்பால்- 
    பொறுப்பரியனகள் பேசில்*  போவதே நோயதாகி* 
    குறிப்பெனக் கடையும் ஆகில்*  கூடுமேல் தலையை*  ஆங்கே,- 
    அறுப்பதே கருமம் கண்டாய்*  அரங்கமா நகருளானே!       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வெறுப்பொடு - (பகவத்விஷயத்தைகு கேட்கவும் பொறாத) வெறுப்போடு கூடிய;
சமணர் - க்ஷபணர்களும்;
முண்டர் - சைவர்களும்;
விதிஇல் - பாக்கியஹீனரான;
சாக்கியர்கள் - பௌத்தர்களும்;

விளக்க உரை

வெறுப்போடு-ஒரு காரணத்தை முன்னிட்டன்றியே நிஷ்காரணமாக எம்பெருமானுடைய பெருமை என்றால் சிவீலென்று திரஸ்கரிக்கையாகிற வெறுப்போடுகூடிய புறச்சமயிகள், ஸாத்விகர் காது கொடுத்துத் கேட்கப்பெறாத உன் விஷயமான தூஷணங்களைப் பேசும்போது அப்பேச்சுக்கள் ஒரு ஸாத்விகன் காதில் விழுந்தால், அவன்றான் மெய்யே ஸாத்விகனாகில் அந்த க்ஷணத்திலேயெ தன்னடையே உயிர் துறக்க வேணும் என்கிறார்-முன்னிரண்டடிகளால். உயிர்துறப்பதறகு நோய் முதலிய சில வியாஜங்கள் நேரவேண்டுமே என்று சிலர் நினைக்கக்கூடுமென்றெண்ணி “போவதே நோயதாகி” என்கிறார். பகவந்நிந்தையைக் கேட்பதற்கு மேற்பட்ட நோய்கூட உலகத்திலுண்டோ? என்பது கருத்து.

English Translation

O Lord in - Arangama-nagar! The hate-filled heresies, Mundas, and the godless Sakhyas speak irresponsibly about you, that itself will be their doom. If the opportunity arises, chopping off their heads right there is the roha Karma for me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்