விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இயக்குஅறாத பல்பிறப்பில்*  என்னை மாற்றி இன்று வந்து,* 
  உயக்கொள் மேக வண்ணன் நண்ணி*  என்னிலாய தன்னுளே,*
  மயக்கினான் தன் மன்னுசோதி*  ஆதலால் என் ஆவிதான்,- 
  இயக்குஎலாம் அறுத்து*  அறாத இன்ப வீடு பெற்றதே  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

என்னை - அடியேனை
மாற்றி - மாற்றுகைக்குத் திருவுள்ளம் பற்றி
வந்து நண்ணி - இங்கேயெழுந்தருளி நெருங்கி
தன்னில் ஆய என்னுள் - தன்னோடு அவிகாபூதமான என்னுள்ளே
தன் - தன்னுடைய

விளக்க உரை

ஸ்வகதஸ்வீகாரம்போல் தோற்றும்படியன்றோ கீழ்ப்பாட்டில் அருளிச் செய்தார்; அங்ஙனன்றிக்கே, பரகதஸ்வீகாரம் பரிமளிக்கப்பேசுகிறார். இதில் நிர்ஹேதுகமாகப் பெரிய பெருமாள் தம்முடைய திவ்யமங்கள விக்ரஹத்தை என்னுள்ளே பிரியாதபடி வைத்தருளினபடியாலே ப்ரதிபந்தக ஸமூஹங்களை யெல்லாம் நிச்சேஷமாகப் போக்கிஅந்தமில் பேரின்பமான ஸகங்கர்ய ஸாம்ராஜ்யத்தைப் பெற்றோனென்று உபாகர ஸ்மருதியோடே தலைக்கட்டுகிறார். எனக்கு அந்தாதியாக நிகழ்ந்துவங்க பலவகைப் பிறவிகளைத் தவிர்த்தருள திருவுள்ளம்பற்றி இன்று நிர்ஹேதுக க்ருபையினாலே நாளிருந்தவிடத்தே வந்து கிட்டித் தனக்கு ப்ரகாரபூசமான என்னுடைய ஹ்ருதயத்திலே தனது ஐ“யோதிர்யமான திவ்யமங்கள விக்ரஹத்தைப் பிரிக்கவொண்ணாதபடி எனக்கு ஒருக்ஷணகாலமும் செல்லாதபடி பண்ணியருளினபடியாலே இவ்வாச்ம வஸ்துவானது ஒன்றோடொன்று பிணைந்துகிடந்த அவித்யாகர்மவாஸாநாருகி ப்ரக்ருதி ஸ்ர்பந்தங்களையெல்லாம் முக்தியைப் பெற்றொழிந்ததென்றாயிற்று. (மயக்கினான்) மயக்குசல் – அறிவுகெடுத்தலும் கலத்தலும், இங்கே, கலத்தல் தன்மன்னுசோதி – “***“ (ஸுந்தரபாஹுதவம்) என்னும்படி விலக்ஷணமான திவ்யமங்களவிக்ரஹத்தை ஜொதி என்றும் சோதி என்றும் சொல்லக்கடவது “ஆதியஞ்சோதியுரு“ என்றாரே நம்மாழ்வாரும்.

English Translation

Pursing through my countless births, the Lord has caught up with me now. The lotus-Lord of cloud-like hue has come to stay within my heart. He revealed his glory form, so now my soul indeed is blest. The Karmic bonds are cut away; the soul has found its joyous home.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்