விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
  என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*
  உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
  மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பூவை வண்ண - காயம்பூப்போன்ற திருமேனியையுடைய
மாய! - ஆச்சர்யபூதரான பெரிய பெருமானே!
கேள் - (இவ்விண்ணப்பத்தைக்) கேட்டருள வேணும்;
என்னது - என்னுடையது
ஆவி என்னும் - ஆத்மா என்கிற

விளக்க உரை

‘ஆழ்வீர்! பரமவிவக்ஷணமான இப்படிப்பட்ட அபிநிவேசம் உமக்கு நம்பக்கலில் உண்டானமை ஆச்சரியமாயிராநின்றதே! இதற்கு அடி என்?’ என்று எம்பெருமான் கேட்டருள; வடிவழகையும் சீலத்தையும் காட்டி தேவரீர் பண்ணின க்ருஷபலித்த பலமன்றேவிது என்கிறார்போலும். காவிரிசூழ்ந்த திருவரங்கம் பெரியகோயிலிலே நித்யவாஸம் செய்தருள்கிற விலக்ஷணமான திருமேனி படைத்த மாயோனே! உன்னுடைய அழகாலும் சீலத்தாலும் எனக்குப் பிறந்த ருசிவிசேஷத்தைக் கேட்டருளவேணும்; உபகாரம் செய்தவளின் தேவரீர் மறந்தொழிந்தாலும் நன்றியறிவுடைய நான் சொல்லக் கேட்க வேணும்; சொல்லுகிறது தான் என்னன்னச் சொல்லுகிறார்- என்னதாவி யித்யாதியால். *** என்று ஜ்ஞாஸ்வரூபாகயும் ஆநநிதஸ்ரூபியாயும் சாஸ்த்ரங்களுள் சொல்லப்பட்டிராநின்ற ஆத்மா என்னளவில் அப்படிப்பட்டதன்று; கொடிய பாபராசிகளின் பிண்டமே ஆத்ம வஸ்துவாக நிற்கிறதெனலாம் அப்படிப்படட் என் ஆத்மவஸ்துவில் தேவரீரைப்பற்றிய அநுராகம் கிளர்ந்து அவ்வநூகாயாமனது தேவரீருடைய பாதாரவிதத்திலே பரிபூர்ணமாக அவகாஹித்து தேவரீருடைய ஸ்வரூபரூபகுண விபூதிகளையெல்லாம் கபளீகரித்து விளங்காநின்றது என்கிறார் இவ்வாழ்வார்க்கு ஆவியென்றும் வல்லினையென்றும் பர்யாயம் போலும். நைச்யாநுஸக்காக பரமகாஷ்யை யிருக்கிறபடி “*** என்ற அநுஸந்தாகம் முதிர்ந்தபடி’ தம்முடைய ஆவிக்கு வல்வினை என்று பெயரிட்டாற்போல பகவத் விஷயாநுரகத்திற்குக் கொழுந்து என்று திருநாமம் சாற்றினர் என்ன தாவியென்னும் வல்வினையிலே கொழுந்து எழுந்ததானது நெருப்பிலே தாமரை பூத்ததுபோலும் என்ற திருவுள்ளந்தோற்ற அருளிச் சொல்கிறபடி பாரீர்.

English Translation

O Wonder-Lord of Kaya-hue of Rangam-oor, pray hear this tale: From the dirt of my spirit a creeper called devotion sprouts, It winds and climbs a tree of strength, -- your holy feet of radiance. It’s found a place to spread and form a canopy above your head!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்