விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்*   சிறுபிறை முளைப் போல* 
    நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே*   நளிர் வெண்பல் முளை இலக* 
    அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி  பூண்ட*  அனந்தசயனன்* 
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செக்கரிடை - செவ்வானத்திலே
நுனி கொம்பில் - கொம்பின் நுனியிலே
தோன்றும் - காணப்படுகிற
சிறுபிறை முளை போல - சிறிய பிறைச்சந்திரனாகிய முளையைப்போல,
நக்க - சிரித்த

விளக்க உரை

உரை:1

புன்முறுவல் செய்துகொண்டே தளர்நடை நடக்கவேணுமென்று இதனால் பிரார்த்திக்கிறபடி, கண்ணபிரானது மிகவுஞ் சிவந்த வாயாகிய மேட்டிடத்தில் வெளுத்த பல்லின் முளைகள் பிரகாசிப்பதானது – செவ்வானத்தில் தோன்றுகின்ற குளிர்ந்த வெள்ளிய சிறு பிறைபோல இருக்குமென்க. ‘நக்க‘ என்றது வாய்க்கு விசேஷணம். “வெண்பல் முளையிலகத் தளர்நடை நடவானோ” என்று அந்வயம். ‘சந்திரன் எங்கே இருக்கிறான்‘ என்றால், ‘அந்த மரக்கிளைக்கு மேலிருக்கிறான்‘ என்று உலகவழக்கிற் காட்டவேண்டி யிருப்பதனால், ‘நுனிக் கொம்பில் தோன்றுஞ் சிறுபிறை முளை‘ என்றார். இங்ஙனம் அறியும் அறிவு - மெனப்படும். சிறுபிறை முளையென்றது மூன்றாம் பிறையை யென்பர். மாமணி – நீலாத்நம், மா – கறுப்புக்கும் பெயர்.

உரை:2

சிவந்த அந்தி நேர வானத்தில் இருக்கும் பிறைநிலவானது, நமக்கு அது மரக்கிளையில் நுனிக்கொம்பின் இடையில் இருப்பது போல் தோன்றும்.குட்டிக்கண்ணனின், மலர் விரிவதைப் போன்று இதமாய், இனிமையாய் சிரித்த சிவந்த வாயின் வீங்கிய ஈறில் புதிதாக முளைத்து எட்டிப்பார்க்கும் குளிர்ந்த பால் வெண்பற்கள் விளங்க இடையில் சங்குமணிகள் கோர்த்த அரைஞாண் கயிறும், மார்பில் பொன்னாலான ஆபரணமும் அணிந்து, அனந்தன் அணை மேல் அறிதுயில் புரிபவனான எம் பிரான் தரமான நீலமணிவண்ண தேகங்கொண்ட வாசுதேவன் புதல்வனே தளர்நடை நடவாயோ!

English Translation

With a conch strung around the waist, and a tortoise-talisman around the neck, the eternally sleeping Lord Vasudeva of dark gem-hue reveals a smile of pearl-white teeth and lips like a thin crescent moon in the red evening sky. Is the going to come toddling now?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்