விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சொல்லினும் தொழிற்கணும்*  தொடக்குஅறாத அன்பினும்,* 
  அல்லும் நன்பகலினோடும்*  ஆன மாலை காலையும்,*
  அல்லி நாள்-மலர்க் கிழத்தி*  நாத!பாத போதினைப்,* 
  புல்லிஉள்ளம் விள்வுஇலாது*  பூண்டு மீண்டது இல்லையே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உள்ளம் - எனது நெஞ்சானது
சொல்லினும் - வாக்கிலும்
தொழில் கணும் - காயிகவ்யபாரங்களிலும்
தொடக்கு அறாத அன்பினும் - பிச்சேதமற்ற அன்பிலும் (ஒருபடிப்பட்டு)
அல்லினோடு ஆன மாலையும் - ராத்ரியோடு கூடின ஸாயம்ஸக் த்யையிலும்

விளக்க உரை

திருவுள்ளத்தை நோக்கி அருளிச்செய்து கொண்டுவந்த ஆழ்வார் இப்பாட்டில் எம்பெருமானையோ நோக்கித் தம் திருவுள்ளத்துக்குண்டான ப்ராப்யருசியை வெளியிடுகிறார். பூவார் திருமாமகள் புல்கிய மார்பனான பெருமானே! என்னுடைய ஹ்ருதயமானது உன்னுடைய திருவடித்தாமரையை ஸர்வகாலங்களிலும் பரிபூர்ணமாக அணைந்து மறுபடி போக்கும் பகவத் விஷயமொன்றே விஷயமாகப் பெற்றமையைக் கூறுவது முதலடி. சிந்தையாலும் சொல்லாலும் செய்கையாலும் அலகாஹிக்கப் பெற்றமையைக் கூறியவாறு. வல்லிநாண்மலர்கிழத்திநாத! - வல்லியென்பதை மவர்க்கு விசேஷண மாக்குதலும் மலர்க்கிழத்திக்கு விசேஷண மாக்குதலும் ஓங்கும். முதற்பக்ஷத்தில், படர்ந்த செவ்வித்தாமரைப்பூ என்றாகிறது. இரண்டாம்பக்ஷத்தில் வல்லிபோல- கொடிபோலே யிராநின்ற நாண்மலர்க்கிழத்தியுண்டு- பெரியபிராட்டியார்; அவட்குநாதனே! என்றாகிறது

English Translation

In every deed and every word, in every thought of constant love, the morning after every night and evening after every night and evening after every day, Worship the Lord of lotus feet with Lady-on-the-lotus chest. When heart is set on him alone, there’s no return-to on this Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்