விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஈனமாய எட்டும் நீக்கி*  ஏதம்இன்றி மீதுபோய்,* 
  வானம்ஆள வல்லையேல்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*
  ஞானம்ஆகி ஞாயிறுஆகி*  ஞாலமுற்றும் ஓர்எயிற்று,* 
  ஏனமாய் இடந்த மூர்த்தி*  எந்தை பாதம் எண்ணியே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நீக்கி - போக்கி
ஏதம் இன்றி - ஸம்ஸார துக்கங்களெல்லாம் போய்
மீது போய் - (அர்சிராதி மார்க்கத்தாலே லீலா விபூதிக்கு) மேலே சென்று
வானம் - பரமபதத்தை
ஆளவில்லை நூல் - அநுபவிக்க வேண்டியிருந்தாயாகில்

விளக்க உரை

ஈனமாயவெட்டும் என்று- ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணுவதான காமம், க்ரோதம்,கோபம், மோஹர், மதம்,மாத்ஸர்யம், அஜ்ஞானம்,அஸூயை என்ற எட்டும் சொல்லிற்றாகவுமாம். (இந்த நிர்வாகஹம் ஆசார்ய ஹ்ருதய வியாக்கியானத்திலுள்ள.) காமமாவ- விரும்பின பதார்த்தத்தை அநுபவித்தே தீரவேண்டும்படியான அவஸ்தை க்ரோதமாவது- அப்படி விரும்பின பதார்த்தம் கிடையாதொழியில் அணுகினவர்கள் மேல் பிறக்கும் சீற்றம். லோபமாவது- கண்ட பதார்த்தங்களிலும் அளவற்ற அபேக்ஷை. மோஹமாவது- கார்யமின்னது அகார்யமின்னது என்று ஆராயமாட்டாமை. மதமாவது- பொருள் முதலியவை கிடைப்பதனால் உண்டாகும் களிப்பு. மாத்ஸர்யமாவது- பிறர்மினுக்கம் பொறாமையை அநுஷ்டாநபர்யந்தமாக நடத்துகை. அஜ்ஞாகமாவது- இவற்றால் மேல்வருங்கெடுதியை நிரூபிக்கமாட்டாமை. அஸூயையாவது- குணங்களிலே தோஷத்தை ஆவிஷ்கரிக்கை. இவை யெட்டும் நீங்கினால் ஏதம் கழியுமாதலால் ஏதுமின்றி எனப்பட்டது. ஞானமாகி ஞாயிறாகி = ஞானத்தையளித்து உள்ளிருளை நீக்குவானும் எம்பெருமானே; ஸூர்யனை யுண்டாக்கி அவன் மூலமாக புறயிருளை யொழிப்பானும் எம்பெருமானே என்ற கருத்து உணரத்தக்கது. ஆச்மஜ்ஞாநத்துக்கும் இந்த்ரியஜ்ஞாநத்துக்கும் நிர்வாஹகனென்றவாறு ஸ்ரீ வாரஹமூர்த்திக்கு ஞானப்பிரான் என்ற திருநாமம் ப்ரஸித்தமாதலால் அதனைத் திருவுள்ளம் பற்றியே ஞானமாகி ஞாயிறாகி என்கிறார்போலும். பிரளயக் கடலில் அழுந்திக் கிடந்த பூமிப்பிராட்டியை உத்தரித்தருளினதுபோலவே ஸம்ஸாரக் கடலில் அழுந்திக்கிடக்கிற நம்மையும் உத்தரித்தள்வான் என்று அநுஸந்திக்க வேணுமென்பது தோன்ற “ஞாலமுற்றோமோரெயிற்றேனமாயிடந்தமூர்த்தி என்கிறார்.

English Translation

If you wish to cut the cords and reach the sky to rule the Earth, then come to worship him O Heart, and offer praise to Holy Feet. The Lord he came as knowledge-Sun and took the earth on tusker-teeth, in form of Boar that all could see and contemplate in deep-of-heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்