விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வைது நின்னை வல்லவா*  பழித்தவர்க்கும் மாறில்போர்* 
  செய்து நின்ன செற்றத் தீயில்*  வெந்தவர்க்கும் வந்து உனை*
  எய்தல்ஆகும் என்பர் ஆதலால்*  எம்மாய நாயினேன்,* 
  செய்தகுற்றம் நற்றமாக*  வேகொள் ஞால நாதனே!  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம் மாய! - எம்பெருமானை!
ஞானம் நாதனை - ஸர்வலோக ஸம்ரக்ஷகனே!
நாயினேன் - அடியேன் பண்ணின
செய்த குற்றம் - குற்றங்களை
நற்றம் ஆகவே கொள் - குணமாகவே கொள்ளல் வேண்டும்.

விளக்க உரை

தம்முடைய அபசாரத்தைப் பொறுத்தருளும்படி பிரார்த்தித்தார் கீழ்பாட்டில்; எம்பெருமானுடைய வாத்ஸல்யமென்னும் குணவிசேஷத்தை ஆராய்ந்து பார்த்தார்; என்னடியாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்று குற்றத்தையும் குணமாகக் கொள்ளுகிற எம்பெருமானுடைய திருவுள்ளம் புண்படும்படி “பொறுத்துநல்கு” என்று பிரார்த்திப்பது மஹாசாரமென்று அநுதபித்து,அவ்வெம்பெருமானுடைய வாத்ஸல்ய குணத்துக்குத் தகுதியாயப் பேசுகிறார். - “காயினேன் செய்த குற்றம் கற்றமாகவே கொள்” என்கிறார். “கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப் பெற்றான். பற்றியுரவிடையாப்பு முண்டான் பாவிகாள் உங்களுக்கேச்சுக்கொலோ?” என்று ஆண்டாள் வயிறெரிந்து பேசும்படியாக தேவரீரை விசேஷமாகத் தூஷித்து தேவரீரோடே எதிரம்புகோத்தும் போர்புரிந்து கடைசியாக தேவரீருடைய கோபத்துக்கு இலக்காகி நீறாயொழிந்த சிசுபால வாலிப்ரப்ருதிகளும் தேவரீருடைய பரதத்தைப் பராப்தரானார்களென்று மஹர்ஷிகள் சொல்லிவைத்திருக்கிறார்கள்: மஹா த்ரோஹிகளான அவர்களுடைய அபராதங்களைப் பொறுத்தருளின தேவரீர். அவர்களைப்போலே ப்ரதிகூலனல்லாத அடியேனுடைய குற்றங்களையும் பொறுத்தல் விசேஷமென்! ஆச்ரிதருடைய குற்றங்களை சுற்றமாகக் கொள்வதன்றோ சிறப்பு என்கிறார். வைதுவல்லவா பர்த்தவனான சிசுபாலனுக்கு மோக்ஷம் கிடைத்ததென்பதைப் பராசரர் சொல்லிவைத்தார், என்பது ஸ்ரீவிஷ்ணுபுராணம். “கேட்பார் செவிசுடு கீழ்மை வசவுகளே வையும் சேட்பால் பழம்பகைவன் சிசுபாலன், திருவடி தாட்பாலடைந்த தன்மையறிவாரையறிந்துமே“ என்றார் நம்மாழ்வாரும். மாறில் போர் செய்து செற்றத்தீயில் வெந்தவனான வாலிக்கு மோக்ஷ ப்ராப்தியை வால்மீகிமுனிவர் கூறினர், என்பது ஸ்ரீராமாயணம். வைதலாவது என்ன? பழித்தலாவது என்ன? எனில், இல்லாத செய்திகளைச் சொல்லி தூஷிப்பது வைதல், உள்ள செய்திகளையே இழிவாகச் சொல்லி தூஷிப்பது பழித்தல் என்று கொள்க.

English Translation

Even those who called you names, and even those who fought with you, Were fortunate to find in you a Lord of grace and forgiveness. And so the faults that I have made this lowly-self, the dog-begone, now you must take as quality, as praise uttered in purity.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்