விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கேடுஇல் சீர் வரத்தினாய்க்*  கெடும்வரத்து அயன் அரன், 
  நாடினோடு நாட்டம்ஆயிரத்தன்*  நாடு நண்ணினும்,* 
  வீடதுஆன போகம்எய்தி*  வீற்றிருந்த போதிலும்*, 
  கூடும்ஆசை அல்லதுஒன்று*  கொள்வனோ? குறிப்பிலே?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கேடு இல் சீர் வரத்தன் ஆம் அயன் - அழிவில்லாத ஸம்பத்தை யுடையவனாம்படி வரம்பெற்றவான பிரமனென்ன
நாடினோடு கூட - நாடுகளோடு கூட
கூடும் ஆசை அல்லது - எம்பெருமானோடு சேரவேணும் சேரவேணும் என்று மநோரதத்திருக்கை தவிர
நாட்டம் ஆயிரத்தன் நாடு - ஆயிரங்கண்ணுடைய இந்திரனுடைய நாட்டையும்
கண்ணீரும் - அடையப்பெறுவதாயிருந்தாலும்

விளக்க உரை

எம்பெருமானைக் கிட்ட அனுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப் பற்றின மநோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில் அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸித்தாந்தம்; அதனை யருளிச் செய்கிறார் இப்பாட்டில். நாட்டம் என்று கண்ணுக்குப் பெயர்; நாட்டமாயிரததன் என்று ஸஹஸ்ராக்ஷனுடைய இந்திரனுக்கு காமதேயமாகிறது. இதனையுணராது, “காடினோடு நாட்டமாய் இரத்தனோடு கண்ணிலும்” என்று ஓதுமவர்களுடைய ஞானப்பெருக்கை என் சொல்வோம்.

English Translation

The world of wealthy Brahma or the wiped-out world of Lord Siva, the kingdom of the thousand eyes that Indra rules in sky above, -- If all this and the joy of life in free Heaven he granted me, I still will crave for thee alone, -- my only aim, to be with you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்