விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கறுத்துஎதிர்ந்த காலநேமி*  காலனோடு கூட அன்று,* 
    அறுத்த ஆழி சங்குதண்டு*  வில்லும் வாளும் ஏந்தினாய்,*
    தொறுக்கலந்த ஊனம்அஃது*  ஒழிக்க அன்று குன்றம்முன்,* 
    பொறுத்த நின் புகழ்க்குஅலால் ஒர்*  நேசம்இல்லை நெஞ்சமே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்னொரு காலத்து
கறுத்து எதிர்ந்த காலநேமி  - கோபித்து எதிரியிட்ட காலநேமியானவன்
காலனோடு கூட - யமலோகம் போய்ச்சேரும்படியாக
அறுந்த - அவன் தலையை அறுத்த
ஆழிசங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய் - பஞ்சாயுதாழ்வார்களை

விளக்க உரை

தேவரீருடைய திவ்யசேஷ்டிதங்களைப் புகழ்ந்து பேசுவதிலேயே அடியேனுக்கு அபிநிவேசம் பெருகுகின்ற தென்கிறார். காலநேமியை முடித்தருளினபடியையும் கோவர்த்தனமலையைக் குடையாக வெடுத்துக் கோநிரையைத் காத்தபடியையும் கூறிப் புகழ்ந்தாராய்ந்து.

English Translation

To kill the angry Kalanemi you did wield your discus sharp. You bear the good weapons-the conch, the discus, dagger, mace and bow. To save the caws in dire distress, you held a mountain lofty-high. My heart is only hankering to hear the wonders of your ways.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்