விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கடுங்க வந்தன் வக்கரன்*  கரன் முரன் சிரம் அவை, 
  இடந்து கூறு செய்த*  பல்படைத் தடக்கை மாயனே,*
  கிடந்துஇருந்து நின்றுஇயங்கு*  போதும் நின்ன பொற்கழல்,* 
  தொடர்ந்து மீள்வுஇலாதது ஒர்*  தொடர்ச்சி நல்க வேண்டுமே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கடு - க்ரூரனான
கவந்தன் - கபந்ததென்ன
வக்கரன் - தந்தவக்த்ரனென்ன
கரன் - கரனென்ன
முரன்  சிறை அவை - முரனென்ன (இவர்களுடைய தலைகளை

விளக்க உரை

ஸர்வாவஸ்தைகளிலும் எம்பெருமானுடைய திருவடிகளிலேயே நிரந்தர சிந்தனை நடைபெறவேணுமென்று பிரார்த்திக்கிறார். (கிடந்திருந்து இத்யாதி.) ****** என்ற ச்லோகம் இங்கு அநுஸந்திக்கத்தக்கது. படுத்துக்கொண்டிருக்கும் போதும் உட்கார்ந்திருக்கும்போதும் நிற்கும்போதும் திரியும் போதும் ஆக எல்லா வவஸ்தைகளிலும் தேவரீருடைய பாதாரவிந்த சிந்தனையே மேன்மேலும் கடந்து வருமாறு அருள் புரியவேணு மென்று பிரார்த்தித்தாராயிற்று.

English Translation

O Wonder-Lord with mighty arms that bear weapons in many forms! You killed and rolled the heads of all Kabanda, Vakradant, Mura. Your golden lotus feet I see in standing, sitting, sleeping pose. Pray make my thoughts to flow without a break on thee and thee alone

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்