விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  விள்வுஇலாத காதலால்*  விளங்குபாத போதில்வைத்து,* 
  உள்ளுவேனது ஊனநோய்*  ஒழிக்குமா தெழிக்குநீர்ப்,*
  பள்ளிமாய பன்றிஆய*  வென்றிவீர குன்றினால்* 
  துள்ளுநீர் வரம்பு செய்த*  தோன்றல் ஒன்று சொல்லிடே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தெழிக்கும் நீர் - கொந்தளிக்கின்ற கடலிலே
பள்ளி - சயனங்கொண்டிருக்கிற
மாய - ஸர்வேச்வரனே!
பன்றி ஆய - மஹாவராஹமாகக் திருவவதரித்த
வென்றி வீர - ஜயசீலனான வீரனே!

விளக்க உரை

‘நின்னபாதபங்கயம் நிரந்தரம் நினைப்பாக நீ நினைக்க வேண்டுமே” என்று பிரார்த்தித்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான் “ஆழ்வீர்! இந்த சரீரம் உள்ளவரையில் அப்படிப்பட்ட நிரந்தரசிந்தனை கூடமாட்டாதுகாணும்; சரீர சம்பந்தம் அற்றொழிந்த பின்புதான் அது வாய்க்கும்” என்ற, ‘பிரானே! இந்த சரீரம் தொலைய வேணுமென்கிற ருசியோ எனக்குப் பூர்ணமாயிராநின்றது; இதனைத் தொலைத்தருளத் தட்டுண்டோ; வாய் திறந்தொரு வார்த்தை அருளிச் செய்யவேணும்” என்கிறார். விள்விலாத காதல்= விள்வாவது பிரயோஜநந்தரங்களை நச்சி நெகிழ்ந்து போகை; அஃது இல்லாத காதல்- அநந்யப்ரயோஜகனாய்க்கொண்டு பண்ணும் ப்ரேமம். அப்படிப்பட்ட ப்ரேமத்தாலே திருவடித் தாமரைகளிலே நெஞ்சை வைத்து அவற்றையே சரணமாக அநவரதம் அநுஸந்தித்துக் கொண்டிருக்கிற அடியேனுக்கு ஊனத்தை விளைக்கும் சரீர ஸம்பந்தமாகிய நோயைப் போக்கியருளும் வகையில் ஒருவகை அருளிச் செய்யவேணும். ‘இன்ன காலத்திலே இதனைப் போக்குகிறேன்’ என்று சொன்னாலும் போருமென்று திருவுள்ளம்.

English Translation

Eternally adoring you, my thoughts are on your lotus-feet. O Lord in sea-of-turbulence, O Boar who came to lift the Earth! O Lord who built a bridge across the mighty ocean deep, and how! Pray speak a word to me about your saving me from life-in-flesh.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்