விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இரந்து உரைப்பது உண்டுவாழி*  ஏமநீர் நிறத்துஅமா,* 
  வரம் தரும் திருக்குறிப்பில்*  வைத்ததுஆகில் மன்னு சீர்,*
  பரந்த சிந்தை ஒன்றி நின்று*  நின்னபாத பங்கயம்,* 
  நிரந்தரம் நினைப்பதாக*  நீ நினைக்க வேண்டுமே  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பரந்த - கண்ட விடங்களில் அலைந்து திரிகிற
சிந்தை - எனது நெஞ்சானது
ஒன்றி நின்று - (தேவர் விஷயத்திலேயே) ஸ்திரமாயிருந்துகொண்டு
நின்ன - தேவரீருடைய
பாதபங்கயம் - திருவடித்தாமரைகளை
 

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், பக்தியைத் தந்தருள வேணுமென்று பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ‘உமக்கு நான் பக்தியைக் கொடுப்பதாவதென்ன? விஷயாந்தரங்களில் நின்றும் மீட்கப்பட்ட இந்திரியங்களைக்கொண்டு நம்மை நிரந்தரமாக நினைத்தால் அதுவே பரமபக்தியாகத் தலைக்கட்டுகிறது; காரியம் உம் கையிலே கிடக்க என்னை நிர்பந்திப்பானேன்?’ என்ன; பிரானே! அப்படி நிரந்தர சிந்தனை பண்ணுவது என் முயற்சியினாலேயே தலைக்கட்டி விடுமோ? தேவரீர் ஸங்கல்பியாதவளவில் அதுதானும் நடைபெறுமோ? ஆகையாலே அடியேன் தேவரீரையே நிந்தரம் நினைப்பேனாம்படி திருவுள்ளம்பற்றி யருளவேணுமென்கிறார். முதலடியின் முடிவில், அமா என்றது அம்மா! என்றபடி: தொகுத்தல், ஸ்வாமிந்! என்கை. ‘இரந்துரைப்பதுண்டு” என்றவாறே எம்பெருமான் முகங்காட்டவில்லை; ‘இவ்வாழ்வார்க்கு காரியமொன்றுமில்லை; திருப்பித்திரும்பி ‘அருளாய், இரங்கு’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்; இவர்க்கு நாம் முகங்கொடுக்கலாகாது’ என்று நினைத்து பாராமுகனாயிருந்தான்; அங்ஙனிருந்ததுகண்டு, வாழி என்று கம்பீரமான மிடற்றோசையோடே பேசினார்; அந்த மங்களசாஸன சப்தம் செவிப்பட்டவாறே எம்பெருமான் பரவசனாய் ஆழ்வாரை நோக்கினான்; நோக்குதலும் அபரிச்சிந்நமான கடல்போலே ச்ரமஹரமான திவ்ய விக்ரஹத்தை ஸேவித்து ‘ஏமநீர் நிறத்து அம்மா!” என்று பெருமிடறு செய்து கூப்பிடுகிறார் என்று விவரித்துக் கொள்க.

English Translation

Hail to you, O Lord of hue like ocean-deep, pray hears me speak! If you intend to grant a boon, then here is what I seek of thee: My thoughts are scattered all around, pray gather them and make them one. Direct them to thy lotus feet, eternally adorable.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்