விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காட்டி நான் செய்வல்வினைப்*  பயன் தனால் மனந்தனை,* 
  நாட்டிவைத்து நல்லஅல்ல*  செய்ய எண்ணினார்எனக்,*
  கேட்டதுஅன்றி என்னதுஆவி*  பின்னைகேள்வ! நின்னொடும்,* 
  பூட்டி வைத்த என்னை*  நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே! 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பயன் தனில் - அப்பாவங்களின் பலன்களை அநுபவிப்பதில்
மனம் தனை - எனது மநஸ்ஸை
நாட்டி வைத்து - துணியும்படி செய்வித்த
நல்ல அல்ல - அஸஹ்ரயமான ஹிம்ஸைகளை
செய்ய எண்ணினார் - செய்ய நினைத்திருக்கிறார்கள்

விளக்க உரை

நான் கணக்கு வழக்கில்லாதபடி செய்திருக்கும் பாவங்களுக்குப் பலன் அனுபவித்தே தீரவேண்டியதாகும்; நான் செய்த பாவங்கள் இவ்வுலகத்தில் அந்தந்த க்ஷணங்களில் அழிந்துபோய்விட்டாலும் அவற்றை நான் மறந்தொழிந்தாலும் பாபபலன்களை ஊட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள யமகிங்கரர்கள் என்னுடைய ஒவ்வொரு பாவத்தையும் எடுத்தெடுத்துக்கூறி ‘இவற்றின் பலனை அநுபவித்தே தீரவேணும்’ என்று வற்புறுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்களென்பதை நான் பெரியோர் முகமாகவும், சாஸ்திரமுகமாகவும் கேட்டிருக்கிறேன்; அப்படிப்பட்ட பயங்கராமன யமகிங்கரயாதனைகள் அடியேனுக்கு நேரக்கூடாதென்று ஏற்கனவே தேவரீர்பக்கல் ஆத்மஸமர்ப்பணம் பண்ணியிருக்கிறேன்; இவ்வடியேனை அந்த ரங்கபூதனாக தேவரீர் திருவுள்ளத்தில் கூட்டிக்கொண்டருளினால் *** என்றபடி அந்த நரகவேதனைகட்கு ஆளாகதொழியலாம்; ஆகையாலே தேவரீர் அடியேனை அவிநாபூதனாகக் கொண்டருள வேணும் என்று பிரார்த்திகிறார். செய்யவெண்ணினார் என்ற வினைமுற்றுக்கு ஏற்ப “நமன் தீமர்” என்ற எழுவாய் வருவித்துக் கொள்ளவேணும். என்றைக்கோ செய்து முடிந்துபோன வல்வினைகளைக் காட்டுவதாவது- நினைப்பூட்டுகை; இன்ன இன்ன பாவங்களைச் செய்தாயென்று தெரிவித்தல் “பயன்றனால்” என்பதும் சிலருடைய பாடம். பயன்றனில் மனந்தனை நாட்டி வைக்கயாவது - பிறரை வஞ்சித்து ஏகாந்தாமகப் பாவங்களைச் செய்து தீர்த்தோம்; அவற்றின் பலன்களை இப்போது அநுபவித்தே தீர வேண்டும்; இப்போது யமபடர்களை வஞ்சிக்க முடியாது என்று தீர்மானித்துக் கொள்ளுகை. யமபடர் செய்யக்கூடிய ஹிம்ஸைகளின் கொடுமையை நினைத்து இன்ன ஹிம்ஸையென்று சொல்ல அஞ்சி கல்லவல்ல என்று பொதுவிலே அருளிச்செய்கிறார்: நல்லதாகாத செயல்களையென்கிறார்.

English Translation

O Lord of Kaya blossom-hue and spouse of Lady Nappinnai! By grace of showing me self, you made my heart to come to you. The things I heard the Lord of Death will do to damage me are wrong, for you do hold me in your heart, I pray you do not leave me now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்