விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆட்கொள்ளத் தோன்றிய*  ஆயர்தம் கோவினை* 
    நாட்கமழ் பூம்பொழில்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 
    வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்* 
    வேட்கையினால் சொல்லுவார்*  வினை போதுமே (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆள்கொள்ள - (அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய - திருவவதரித்த
ஆயர்தம் கோவினை - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால் - ஆசையினால்
நாள் - எந்நாளிலும்

விளக்க உரை

இவ்விருள் தருமா ஞாலத்திலுள்ள சேதனர்களைத் திருத்தியடிமை கொள்வதற்காகத் திருவவதரித்த கண்ணபிரானை நோக்கிச் சப்பாணி கொட்டுமாறு சொன்ன இப்பாசுரங்கள் பத்தையும் அன்புடன் ஓதவல்லவர்கள் தீதிலராவர். மூன்றாமடியில் ‘வேட்கையால்’ என்று ஓதுவார்கள். அடிவரவு – மணி பொன் பன் துயிலா புட்டி தாரித்து பரந்து குரக்கினம் அளந்துஅடைந்து ஆட்கொள்ளத் தொடர்.

English Translation

This decad of Chappani is by Pattarbiran of Villiputtur surrounded by fragrance-wafting gardens, sung with love for the Lord who appeared as the king of the cowherd clan to redeem the world. Those who sing it with love will be freed of despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்