விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மறம் துறந்து வஞ்சம்மாற்றி*  ஐம்புலன்கள் ஆசையும்- 
  துறந்து,*  நின் கண் ஆசையே தொடர்ந்து*  நின்ற நாயினேன்,*
  பிறந்துஇறந்து பேர்இடர்ச்*  சுழிக்கணின்று நீங்குமா,* 
  மறந்திடாது மற்றுஎனக்கு*  மாய! நல்க வேண்டுமே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாய! - ஆச்சரிய சக்தி யுக்தனான பெருமானே!
மறம் துறந்து - கோபத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி - கன்னங்சுவடுகளைத் தவிர்த்து
ஐம்புலன்கள் ஆசையும் துறந்து - பஞ்சேந்த்ரியங்களினுடைய விஷயாந்தரப் பற்றையும் ஒழித்து
நின் கண் - உன் பக்கலில்

விளக்க உரை

பிறர்க்கு ஒரு ஏற்றமிருந்தால் அதனை பொறுக்கமாட்டாமையும் பிறர்க்குத் தீங்கு விளைவிப்பதையே சிந்திக்கையும் மறம் எனப்படும். அதனை யொழித்து, வஞ்கமாவது- அநுகூலன் போலத் தோற்றி முடிவில் பிரதிகூலனாய் நிற்றல்; அதனையும் தொலைத்து, இந்திரியங்களுக்கு விஷயாந்தரங்களிலுண்டான ஆசையையும் அகற்றி உன்பக்கல் ஆசையே மேன்மேலும் தொடர்ந்து பெரும்படியான நிலைமையிலேயே நின்ற அடியேன், பிறப்பதும் இரப்பதுமான மஹா துக்கசக்கரத்தில் நின்றும் நீங்கும் விதத்தையும் அதற்குப்பிறகு ப்ராப்தமாகக் கூடிய பரமாநந்த ஸாம்ராஜ்யத்தையும் நீயே தந்தருளவேணும். மற்று என்பதை அசைச்சொல்லாகக் கொண்டு,பேரிடர் சுழிக்கணின்று நீங்குதலை மாத்திரமே பிரார்த்திக்கின்றா ரென்னவுமாம்.

English Translation

Forsaking anger and deceit and wearing from the senses five, I seek to see your feet alone, I have no valuating ambitions. This life of cyclic birth-and-death, you must remove me from the snare, and take me to your lotus feet, O Lord of countless wonder deeds!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்