விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பார் மிகுத்த பாரம் முன்*  ஒழிச்சுவான் அருச்சுனன்,* 
  தேர் மிகுத்து மாயம்ஆக்கி*  நின்றுகொன்று வென்றிசேர்,*

   

  மாரதர்க்கு வான்கொடுத்து*  வையம் ஐவர் பாலதாம்,* 
  சீர்மிகுத்த நின்அலால் ஒர்*  தெய்வம் நான் மதிப்பனே?

   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒழிச்சுவான் - ஒழிப்பதற்காக
அருச்சுனன்  தேர் மிகுத்து - அர்ஜுனனுடைய தேரை நன்றாக நடத்தி
மாயம் - (பகலை இரவாக்குகை முதலான) ஆச்சரியச் செயல்களை
ஆக்கி நின்று - உண்டாக்கி
கொன்று - (எதிரிகளைக்) கொன்று

விளக்க உரை

அதிரதர், மஹாரதர் , ஸமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர் நால்வகைப்படுவர்; அஸஹாயராய்த் தாம் ஒரு தேரின் மேலிருந்து தமது ரதகஜ துரகபதாதிகளுக்கு அழிவுவராமல் காத்துக்கொண்டு பல்லாயிரம் தேர் வீரர்களோடு பொருது வெல்லும் வல்லமையுள்ளார் அதிரதர் என்றும், கீழ்சொன்னபடியே தாமிருந்து பதினோராயிரம் தேர்வீரரோடு பொருபவர் மஹாதரர் என்றும், ஒரு தேர்வீரரோடு தாமுமொருவராய் நின்று எதிர்க்கவல்லவர் ஸமரதர் என்றும், அங்ஙனமே பொருது தம் தேர் முதலியவற்றை இழந்துவிடுபவர் அர்த்தரதர் என்றும் சொல்லப்படுவர். இப்பாட்டில் மடாரதர் என்றது மஹாரதர் என்றபடி, போர்க்களத்திலே மடிந்த வீரர்கட்கு ஸ்வர்க்கம் கிடைப்பதாக சாஸ்திரம் கூறுவது பற்றி “மாரதர்க்கு வான் கொடுத்து” என்றார். தோற்றொழிந்த மாரதர்கட்கு வென்றிசேர் என்ற அடைமொழி தருமோவெனின்; ஐயம் பெறுதற்கு யோக்யதையுடையவர்கள் என்று பொருளேயல்லது வெற்றிபெற்றவர்களென்று பொருளல்ல; ஆகவே,வென்றிசேர்- ஐயமுண்டாவதாக நினைத்திருந்து- என்றதாயிற்று.

English Translation

To rid the world of tyrant kings, you came as chariot-driver for Arjuna the valiant, and fought a war of wondrous deeds. You gave the sky to hundred sons; and kingdom of the Earth to Five. Apart from you, O Glory-god, now how to praise another one?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்