விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அடைந்திட்டு அமரர்கள்*  ஆழ்கடல் தன்னை* 
  மிடைந்திட்டு மந்தரம்*  மத்தாக நாட்டி* 
  வடம் சுற்றி*  வாசுகி வன்கயிறு ஆகக்* 
  கடைந்திட்ட கைகளால் சப்பாணி* 
  கார்முகில் வண்ணனே! சப்பாணி    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அமரர்கள் - தேவர்கள்
அடைந்திட்டு - (உன்னைச்) சரணமடைய (நீ)
ஆழ்கடல் தன்னை - ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்)
விடைந்திட்டு - நெருங்கி
மந்தரம் - மந்தர பர்வதத்தை

விளக்க உரை

அடைந்திட்டு - அடைந்திட; எச்சத்திரிபு. எம்பெருமான் தேவர்களையும் அஸுரர்களையும் முதலிற் கடையும்படி விட்டு, பின்பு அவர்கள் இளைத்துநிற்க தான் இரண்டு ரூபத்தை யெடுத்துக்கொண்டு தேவர்கள் பக்கத்திலும் அஸுரர்கள் பக்கத்திலும் போய் அவர்களுக்கு ஸஹாயமாக நின்று அமுதம் தோன்றுமளவும் கடைந்தனனென அறிக. மிடைந்திட்டு - மிடைந்திட்டு (செருக்கி) எனப் பிறவினைப் பொருள்கொள்க; எதுகை நோக்கி வந்த வழுவமைதி. மந்தரம், வாசுகி - வடசொற்கள்.

English Translation

These are the hands that churned the deep ocean with gods and Asuras by planting the Mandara mount as the churning stick, and winding the serpent Vasuki over it as the churning rope. Clap Chappani. O, Dark cloud-hue lord, clap Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்