விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நெற்றிபெற்ற கண்ணன் விண்ணின்*  நாதனோடு போதின் மேல்,* 
  நற்றவத்து நாதனோடு*  மற்றும்உள்ள வானவர்,*
  கற்ற பெற்றியால் வணங்கு*  பாத!நாத! வேத,* நின்- 
  பற்றுஅலால் ஒர் பற்று*  மற்றது உற்றிலேன் உரைக்கிலே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

போதின் மேல் நல் தவத்து நாதன் - தாமரைப்பூவிலே பிறந்த நல்ல தபாஸனான நான்முகக் கடவுளும்
மற்றும் உள்ள வானவர் - மற்றுமுண்டான பல தேவதைகளும்
கற்ற வெற்றியால் - தாங்கள் தாங்கள் அப்பயணித்துள்ள முறைமைக் கிணங்க
வணங்குபாத! - வந்து வணங்கப்பெற்ற திருவடிகளை யுடையவனே!
நாத! - நாயகனே!

விளக்க உரை

முக்கண்ணன் முதலிய தேவதைகளுங்கூடத் தங்களுடைய அபீஷ்ட ஸித்திக்கு தேவரீருடைய கையையே எதிர்பார்த்திருக்கறார்களாகையாலே அடியேனுக்கும் தேவரீரொழிய வேறு புகலில்லையனென்று தம்முடைய அநந்யயதித்வத்தை விளம்புகிறார். நெற்றிக்கண்ணனான சிவனென்ன, ஸ்வர்க்கத்துக்கு நிர்வாஹகனான இந்திரனென்ன, திருநாபிக்கமலத்திலே பிறந்து மஹாபஸ்வியான பிரமனென்ன இவர்களும் மற்றுமுள்ள பற்பல தேவதைகளும் தங்கள் தங்களறிவுக்குத் தகுதியானத் திருவடி பணியப்பெற்றவனே! உலகங்கட்கெல்லாம் தனி நாயகனான வேதங்களில் பிரதிபாதிக்கப்பட்டுள்ளவனே! “கலைவாய் துன்பங் களையாதெழிவாய் களைகண்மற்றிலேன்” என்றாற்போல உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிவாய் கனைகண்டமற்றிலேன்” என்றாற்போல உன்னையே சரணமாகப் பற்றியிருக்குமதொழிய வேறொரு சரணமும் அடியேனுடைய நெஞ்சினால் கொள்ளப்படவில்லை யென்கிறார். இரண்டாமடியில் ‘நற்றவத்து” என்றும் “நற்றவத்த” என்றும் பாடபேதங்களுண்டு. “கற்ற பெற்றியால்” என்றவிடத்து “தங்களன்பாரத் தமதுசொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்து பூசிப்ப” என்று திருவாய்மொழி நினைக்கத்தக்கது.

English Translation

O Lord of Vedas, feet adored by Lord Siva with extra eye, the king-celestial Indra and the lotus-seated Brahma too, and all the gods in high Heaven who bow and offer praise o you! To tell the truth I have no love apart from you touch my heart.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்