விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சாடுசாடு பாதனே!*  சலம்கலந்த பொய்கைவாய்,* 
  ஆடுஅராவின் வன்பிடர்*  நடம் பயின்ற நாதனே,*
  கோடு நீடு கைய! செய்ய*  பாதம் நாளும் உள்ளினால்,* 
  வீடனாக மெய்செயாத*  வண்ணம்என்கொல்? கண்ணனே!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

செய்ய பாதம் - (உனது) செந்தாமரைபோற் சிவந்த திருவடிகளை
நாளும் - நாள்தோறும்
உன்னினால் - அடியேன் தியானித்துக் கொண்டிருக்கும்போது
மெய் - மெய்யாகவே
வீடன் ஆக செயாத வண்ணம் என் கொல் - (அடியேனை) முத்தனாக்காதது ஏனோ!

விளக்க உரை

எம்பெருமான் விரோதிநிரஸநத்தில் ஸமர்த்தன் என்னுமிடத்தை நிரூபித்துக் கொண்டு இப்படி ஸமர்த்தனான நீ என் விரோதியை மாத்திரம் நிவர்த்திப்பியாமல் உபேக்ஷை பண்ணுவது தகுதியோவென்கிறார். சலம் கலந்த பொய்கை = அப்பொய்கையிலே விஷமே விஞ்சினதென்றும் அத்தோடு கூட ஜலமும் சிறிது சேர்ந்திருக்குமென்றும் உணர்க. வீடன் = வீட்டையந்தவன், முக்தன்.

English Translation

O Lord, you broke the laden cart, O Lord you went into the lake, O Lord, you put your lotus-feet and danced on hoods of snake in it! O Lord you hold a conch in hand, I think about you constantly, and yet you do not make me free, now how come this O Kanna Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்