விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பின்பிறக்க வைத்தனன் கொல்*  அன்றி நின்று தன்கழற்கு,* 
  அன்புஉறைக்க வைத்தநாள்*  அறிந்தனன் கொல் ஆழியான்,*
  தன்திறத்துஒர் அன்பிலா*  அறிவுஇலாத நாயினேன்,* 
  என்திறத்தில் என்கொல்*  எம்பிரான் குறிப்பில் வைத்ததே? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் அன்பு இலா - சிறிதும் அன்பு இல்லாதவனும்
அறிவு இலாத - விவேகமில்லாதவனும்
நாயினேன் - நீசனுமாகிய
என் திறத்தில் - என் விஷயத்திலே
எம்பிரான் - எம்பெருமான்

விளக்க உரை

கீழ்ப்பாட்டிலே ப்ரஸ்தாவித்த பக்தியானது தம்மிடத்தில் இல்லாமையாலும் தாம் ப்ரக்ருதி பரவசராயிருக்கக் காண்கையாலும், எம்பெருமான் கேட்பாரற்ற ஸ்வதந்தரனாகையாலும்-, அவன் திருவுள்ளமுகந்தாலல்லது பேறு பெற முடியாதாகையாலும் இக்காரணங்களையெல்லாம் கருதி ‘எம்பெருமான் என்னைத் தன் திருவடிகளிலே பரமபக்தனாம்படி பண்ணியருள நினைத்திருக்கிறானோ! அன்றி நித்ய ஸம்ஸாரியாக்க நினைத்திருக்கிறானோ? என் திறத்தில் என் நாதன் திருவுள்ளப்பற்றியிருப்பது என்னோ! என்கிறார். இந்த சரீரம் முடிந்தபின்பும் கூட இன்னும் சில சரீரங்களையும் நான் கொள்ளும்படியாக நினைத்திருக்கிறானோ? அன்றியே, தனது திருவடிகளில் இடையறாத அன்பை எனக்கு உறைக்கவைத்து அத்திருவடிகளை யநுபவிப்பேனாம்படி ஒரு நல்ல காலமுண்டாக நினைத்திருக்கிறானோ? அவன் விஷயத்திலே அணுமாதரமும் அன்பில்லாத அஜ்ஞனும் நீசனுமாகிய என் விஷயத்திலே எது செய்வதாகத் திருவுள்ளமோ தெரியவில்லையே! என்று அலமருகின்றார். “பின் பிறக்கவைத்தனன் கொல்” என்றவிடத்து, ‘பின்பு இறக்கவைத்தணன்’ கொல் என்றும் பிரிக்கலாம்; இறப்பானது மறுப்பு; (எம்பெருமானை மறந்திருப்பதே ஆத்மாவுக்கு இறப்பு.) தன் பக்கலிலே எனக்கு ஞானம் பிறந்த பின்பும் தன்னை மறக்கும்படியாக்கி வைக்கிறானோ? என்றவாறு.

English Translation

The Lord who holds the wheel of Time, - does he indent another birth for me to go through in this world, a loveless lowly dog-begone? Or does the Lord indent for me the service to his lotus feet in Vaikunta his radiant home? I wonder what he has in store.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்