விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எத்திறத்தும் ஒத்துநின்று*  உயர்ந்துஉயர்ந்த பெற்றியோய்,* 
    முத்திறத்து மூரிநீர்*  அராவணைத் துயின்ற,* நின்- 
    பத்துஉறுத்த சிந்தையோடு*  நின்றுபாசம் விட்டவர்க்கு,* 
    எத்திறத்தும் இன்பம் இங்கும்*  அங்கும் எங்கும் ஆகுமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின் - தேவரீர் விஷயத்திலே
பத்து உறுத்த சிந்தையோடு நின்று - பக்தி அழுந்தின நெஞ்சோடு கூடியிருந்து
பாசம் விட்டவர்க்கு எத்திறத்தும் இன்பம் - விஷயாந்தரப் பற்றுக்களை விட்டவர்கட்கு ஸர்வவித ஸுகமும்
இங்கும் - இவ்வுலகத்திலும்
அங்கம் - அவ்வுலகத்திலும்

விளக்க உரை

தேவஜாதியிலும் மநுஷ்யனாதியிலும் திர்யக்ஜாதியிலும் ஸ்தாவரஜாதியிலும் ஸஜாதீயனாய் அவதரித்து தஜ்ஜாதியர்களை அந்தந்த ஜாதியாலே ஒருபுடையொத்திருந்தாலும் குணப்பெருமயாலுண்டான மேன்மையையுடையவனே! திருப்பாற்கடலிலே திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளாநின்ற உன்பக்கல் பக்திமிகுந்த மநோரதத்தோடே நின்று விஷயாந்தரங்களில் பற்றை அறுத்துக்கொள்பவர்கட்கு இம்மண்ணுலகத்திலும் வானுலகத்திலும் மற்றெவ்வுலகத்திலும் ஸர்வப்காரங்களாலும் ஆநந்தம்- நிரம்புமென்கிறார். முந்நிறத்து மூரிநீர், ஊற்றுநீர், மழைநீர் என்று மூன்றுவகைப்பட்ட நீரையுடையது கடல். “முந்நீர்’ என்னக்கடவதிறே. மூரி- பழையதான; பெரிதான என்றுமாம்.

English Translation

O Lord present in all the forms, O Lord transcending all the forms! O Lord who sleeps in ocean-deep on serpent-bed in Yogic ease! For those who count on you alone and sacrifice their fixations, a life of joy untold awaits them here and there and hereafter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்