விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கடைந்த பாற்கடற் கிடந்து*  கால நேமியைக் கடிந்து,* 
    உடைந்தவாலி தன் தன்தனக்கு*  உதவ வந்து இராமனாய்,* 
    மிடைந்த ஏழ் மரங்களும்*  அடங்க எய்து வேங்கடம்* 
    அடைந்தமால பாதமே*  அடைந்து நாளும் உய்ம்மினோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பால் கடல் - திருப்பாற்கடலிலே
கிடந்து - கண்வளர்ந்தருளியும்
காலநேமியை - காலநேமியென்னுமசுரனை
கடிந்து - ஒழித்தருளியும்
உடைந்த - நடுங்கிக் கிடந்த

விளக்க உரை

(உடைந்தவாலி தந்தனுக்கு.) ‘உடைந்த’ என்ற அடைமொழி வாலிக்கும் ஆகலாம்; வாலிதம்பிக்குமாகலாம். உடைதல்- தளர்வு. வாலி, ‘நமக்குப் பகையான ஸுக்ரீவன் நாம் புகவொண்ணாதரிச்யமூகமலையிலே ஹனுமானைத் துணைகொண்டு வாழாநின்றான்; எந்த ஸமயத்திலே நமக்கு என்ன தீங்கை விளைப்பானோ’ என்று உடைந்து கிடப்பவன். ஸுக்ரீவனுடைய உடைதல் சொல்ல வேண்டா. “வாலி தன்பீனுக்கு” எனப் பாடமிருந்திருக்க மென்பர்.

English Translation

O Lord in Milky Ocean-white, O Kalanemi-vanquisher! You came on Earth as Bow-Rama; you gave your word to Sugriva, and shot an arrow through the trees, O lord who lives in Venkatam! O people of the dainty Earth! Come, love the Lord and live again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்