விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாசிஆகி நேசம்இன்றி*  வந்துஎதிர்ந்த தேனுகன்,* 
    நாசம்ஆகி நாள்உலப்ப*  நன்மை சேர் பனங்கனிக்கு,*
    வீசி மேல் நிமிர்ந்ததோளின்*  இல்லைஆக்கினாய், கழற்கு* 
    ஆசைஆம் அவர்க்குஅலால்*  அமரர் ஆகல்ஆகுமே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நேசம் இன்றி வந்து - பக்தியற்றவனாய் வந்து
எதிந்த - எதிரிட்ட
தேனுகன் - தேநுகாஸுரனை
நாசம் ஆகி நான் உலப்ப - ஆயுள் ஸுமாண்டு அழிந்து போம்படியாக
மேல் நிமிர்ந்த தோளின் - உயர்த்தூக்கப்பட்ட தோளாலே

விளக்க உரை

ழ்ப்பாட்டில் “பத்தினாபதோற்றமோடு” என்று ப்ரஸ்தாவிக்கப்பட்ட தசராவதாரங்களுள் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை அநுஸந்தித்து அவ்வவதார சேஷ்டிதங்களுன் ஒன்றான தேநுகாஸுர நிரஸந விருத்தாந்தத்தைப் பேசி, இப்படிப்பட்ட ஆச்ரித விரோதி நிவாதகனான எம்பெருமான் திருவடிகளிலே ஆசையுடையார்க்கன்றி மற்றையோர்க்கு நித்யஸூரிபோகம் கிடைக்கமாட்டாதென்கிறார்.

English Translation

The loveless hated Dhenukan, the ass who came against a hill, -- you swirled and let him hit against a tree with fruiting Palmyra. O Lord with golden lotus feet, you killed the Asuras in hordes. By pouring heart with love to you, a mortal too can be a god!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்