விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அளந்து இட்ட தூணை*  அவன் தட்ட* ஆங்கே- 
    வளர்ந்திட்டு*  வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
    உளந் தொட்டு இரணியன்*  ஒண்மார்வு அகலம்* 
    பிளந்திட்ட கைகளால் சப்பாணி*  
    பேய் முலை உண்டானே! சப்பாணி.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளந்திட்ட - (தானே) அளந்துகட்டின
தூணை - கம்பத்தை
அவன் - அந்த ஹிரண்யாஸுரன் (தானே)
தட்ட - புடைக்க
ஆங்கே - (அவன் புடைத்த) அந்த இடத்திலேயே

விளக்க உரை

அளந்திட்ட தூணாவது - முன்பே நரசிங்க­மூர்த்தியை உள்ளே வைத்துக்கட்டிய தூண் என்று சொல்லமுடியாதபடி தானே தனக்குப் பொருந்தப் பார்த்துக் கட்டினது. தூண் - ‘ஹூணா’ என்ற வடசொல் விகாரம். அவன் தட்ட - கையிலே நரசிங்கத்தை அடக்கி வைத்துக்கொண்டு வந்து பாய்ச்சினார்கள் என்றுவொண்ணாதபடி தானே அழன்று புடைக்கவென்கை. உளம் - உள்ளம் என்பதன் தொகுத்தல். ஒன்மார்பென்ற - நரஸிம்ஹத்தினுடைய கோபாக்னியாலும் தன் வயிற்றிலுள்ள பயாக்கியாலும் பிறந்த பரிதாபத்தாலே பொன்மயமான மார்பு உருகி ஒளிவிட்டு உகிரால் எளிதாகக் கிழிக்கும்படியாயிற்றென்ற கருத்தைக் காட்டும். மார்பு அகலம் - அகலமான மார்பு என்றுமாம்.

English Translation

These are the hands that tore into the wide chest of Hiranya Kasipu,--you appeared as a fierce lion with sword-sharp claws and struck terror in his heart,--when he pointed at a pillar and smote it. Clap Chappani. O Lord, you sucked the ogress’s breast, clap Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்