விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சோர்வுஇலாத காதலால்*  தொடக்குஅறா மனத்தராய்,* 
  நீர்அராவணைக் கிடந்த*  நின்மலன் நலங்கழல்,* 
  ஆர்வமோடு இறைஞ்சிநின்று*  அவன்பேர் எட்டுஎழுத்துமே,* 
  வாரம்ஆக ஓதுவார்கள்*  வல்லர் வானம் ஆளவே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரா அணை - திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே
கிடந்த - கண் வளர்ந்தருள்கிற
நின்மலன் - அகில ஹேயப்ரத்யநீகனான எம்பெருமானுடைய
நலம் கழல் - நன்மைபொருந்திய திருவடிகளை
ஆர்வமோடு - அன்புடன்

விளக்க உரை

ஒருவன் பகவத்விஷயத்தில் மிக்க ப்ராண்யமுடையனாயிருந்தாலும் அவனுக்கு விஷ்யாந்தரப்பற்றும் சிறிது கிடக்குமாகில் அதுவானது பகவத் விஷயப்ரவண்யத்தை விரைவில் குலைத்துவிடும். அங்ஙனல்லாமல் பகவத்விஷயமொன்றிலேயே ஏகாக்ரமான காலானது சோர்விலாத காதலெனப்படும். அப்படிப்பட்ட ப்ரேமத்தினால் பகவதநுஸந்தாநம் மாறாத நெஞ்சையுடையராய்க் கொண்டு, க்ஷீரஸாகரசேஷசாயியினுடைய திருவடிகளை போக்யதாபுத்தியோடே ஆச்ரயித்துத் திருவஷ்டாக்ஷாரத்தை அன்புடன் அதிகரிக்கவல்லவர்கள் பரமபதத்துக்கு நிர்வாஹகராகப் பெறுவார்கள்.

English Translation

A steadfast love that fills the heart, a tireless heart that fills with love, for lotus feet of lord reclining on a serpent bed at sea, by those who stand and chant aloud the name of his with eight letters, the Lord he grants security and rule of the sky as well.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்