விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புன்புல வழியடைத்து*  அரக்கிலச்சினை செய்து,* 
    நன்புல வழிதிறந்து*  ஞான நற்சுடர்கொளீஇ,*
    என்பிலெள்கி நெஞ்சுருகி*  உள்கனிந்து எழுந்ததோர்,* 
    அன்பிலன்றி ஆழியானை*  யாவர்காண வல்லரே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நல்சுடர் - விலக்ஷமான ப்ரபையை
கொளீ இ - கொளுத்தி (ஞானத்தை நன்கு பிரகாசிக்கச் செய்து)
என்பு இல் - எலும்பு வீடாகிய சரீரம்
என்கி - சிதிலமாகி
நெஞ்சு உருகி - நெஞ்சு உருகி (இப்படிப்பட்ட நிலைமையில்)

விளக்க உரை

க்ஷûத்ர விஷயங்களைப் பற்றியோடுகிற இந்திரியங்களின் ஓட்டத்தைத் தடுத்து அவ்விஷயமார்க்கமே புல்மூடிப் போம்படி அடைத்து அரக்கு முத்திரையிட்டு வானனையும் மறுவலிடாதபடி பண்ணி, விலக்ஷண விஷயத்தில் இந்த்ரியங்களைப் பரவவிட்டு விலக்ஷணமான ஜ்ஞாநப்ரபையை நன்றாக விளக்கி எம்பெருமானுடைய ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வரூபரூப குணவிபூதிகளை ஸ்வஜ்ஞாநத்துக்கு விஷயமாக்கி, அஸ்திமயமான சரீரம் சிதிலமாய் ஹ்ருதயம் உருகிக் கனிந்த ப்ரேம முண்டானவல்லது சக்ரபாணியான எம்பெருமானை யார் ஸாக்ஷாத்கரிக்கவல்லர்?- “எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறபடியே- விஷயாந்தரங்களிலே அவகாஹிப்பதற்கு அடியான பாபத்தையும் எம்பெருமான் திறத்தில் வைமுக்கியத்துடனிருக்கைக்கு ஹேதுவான பாபத்தையும் கையில் திருவாழியாலே இரு துண்டமாக வெட்டி, கையுந் திருவாழியுஞ் சேர்ந்த சேர்த்தியைக் காட்டித் தன் விஷயமான பக்தியை வளரச்செய்த அப்பெருமானை நான் கண்டாப்போனே வேறுயார் காணவல்லாரென்றவாறு. புன்புலவழிகளில் அரக்கிலக்கினை (ஸீல்) வைக்க முடியுமோ வென்னில்; மறுபடியும் அந்த வழி காணவொண்ணாதபடி நன்றாக அதனை மறந்து என்றபடி, என்பிலென்கி = என்பு- எலும்பு; எலும்புகட்கு, இல்- இருப்பிடம், சரீரம் ; அது என்குமோ வெனில் “கடல்நிறக்கடவுளெந்தையரவணைத்துயிலுமா கண்டு, உடலெனக் குருகுமானோ” என்றாரே தொண்டரடிப் பொடியாழ்வார்.

English Translation

Subdue the senses; seal the paths with sealing wax and branding seals. Throw the portal doors of open heart and light a lamp in it. With shaking body, melting heart and quaking voice of ripe wisdom, the love that surging rises high, alone is way to see the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்