விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஒன்றிநின்று நல்தவம்செய்து,*  ஊழியூழி தோறெலாம்,* 
  நின்றுநின்று அவன்குணங்கள்*  உள்ளியுள்ளம் தூயராய்,*
  சென்றுசென்று தேவதேவர்*  உம்பர் உம்பர் உம்பராய்,* 
  அன்றியெங்கள் செங்கண்மாலை*  யாவர்காண வல்லரே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நல் தவம் - விலக்ஷணமான தபஸ்ஸை (அதாவது  கர்மயோகத்தை)
ஊழி ஊழிதோறு எலாம் செய்து - பலபல ஜந்மபரம்பரைகளிலே அநுஷ்டித்து
அவன் குணங்கள் - அப்பெருமானுடைய திருக்குணங்களை
நின்று நின்று உள்ளி - ஸாத்மிக்க ஸாத்மிக்க அநுஸந்தித்து
உள்ளம் தூயர் ஆய் - கல்மஷமற்ற நெஞ்சை யுடையராய்

விளக்க உரை

விசாலமான விஷயாந்தர வழிகளிலே ஓடக்கடவதான நெஞ்சை அவற்றில் நின்றும் வருந்தி மீட்டுப் பகவத்விஷயத்திலே நிலை நிறுத்தி நெடுங்காலம் கர்மயோகத்தை யநுஷ்டித்து அவ்வெம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை க்ரமேண அநுஸந்தித்து, ஆகவிப்படி கர்மயோகா துஷ்டாகத்தாலும் குணாநுஸந்தாகதத்யாலும் மனம் பரிசுத்தமாகப் பெற்று, க்ரமத்தில் அநவரதபாவகையனவிற்சென்று பரமபக்தி தலையெடுத்துப் பரமபதத்திற்சென்று சரணாகதவத்ஸலனான புண்டரீகாக்ஷனை ஸேவிக்கப்பெறலா மத்தனையொழிய வேறு எவ்வழியாலே அவனை ஸாக்ஷாத்கரிக்க முடியும்? என்கிறார். எங்கள் பெருமானை யென்றாவது, எங்களீசனை யென்றாவது அருளிச்செய்யாது “எங்கள் செங்கண்மாலை” என்றருளிச் செய்த தன் உட்கருத்தைப் பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்கிறார். காண்மின்- ** *** என்கிறபடியே ருசியே தொடங்கிப் பரமபக்தி பர்யந்தமாக அத்தலையில் விசேஷ கடாக்ஷத்தாலே ஸித்தி யென்று தோற்றுகைக்காகச் செங்கண்மால் என்றது என்று.

English Translation

Steady the heart and set the mind on him through time again. Contemplate his quality who lives through age and countless age. Repeat his name again, again, and reach the Lord, the god-of-gods. Aside from this there is no way to see the Lord our Senkamal.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்