விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  போதில் மங்கை பூதலக்கிழத்தி*  தேவி அன்றியும்,* 
  போதுதங்கு நான்முகன்*  மகன் அவன் மகன் சொலில்*
  மாதுதங்கு கூறன்ஏற*   ஊர்தியென்று வேதநூல்,* 
  ஓதுகின்றது உண்மை அல்லது*  இல்லை மற்றுரைக்கிலே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

போதில் மங்கை - பூமகளான லக்ஷிமியும்
பூதலம் கிழத்தி - பூமிப்பிராட்டியும்
தேவி - தேவிமாராவர்;
அன்றியும் - மேலும்
போது தங்குநான் முகன் - பூவிலே பொருந்திருப்பவனான பிரமன்

விளக்க உரை

எம்பெருமானுடைய பரத்வஹேதுவான பெருமைகளைப் பேசுகிறார். பூவிலே பிறந்த பெரியபிராட்டியாரும்; ஸ்ரீபூமிப்பிராட்டியாரும் தேவிமாராக இருக்கிறார்கள்; நாபிக்கமலத்திலே பிறந்த நான்முகம் புத்திரனாக அமைந்திருக்கிறான்; ஸாம்பமூர்த்தியாய் ஸ்ரூஷபத்வஜனான ருத்திரன் பௌத்திரனாக அமைந்திருக்கிறான் - இது நான் சொல்லும் வார்த்தையல்ல; வேதங்களில் முறையிடப்படும் பொருள் இதுவேயாம். இது யதார்த்தமேயன்றி ப்ரசம்ஸாவாக்யமல்ல. ச்ரிய: பதி என்னுமிடமும் பிரமனுக்குப்பிதா என்னுமிடமும் சிவனுக்குப் பிதாமஹன் என்னுமிடமும் எம்பெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபித்துக்கொடுத்து சிவாதிகளுடைய அவரத்வத்தையும் நிலைநாட்டித்தருமென்க.

English Translation

The lotus-lady on his chest and Earthy lady at his feet, are spouses for the lotus-Lord whose navel bears the Maker-Lord. The Lord with lady-half-his-self, -- rider of the bull, -- Siva is son of Brahma, Vedas quoth, now all the rest is falsity.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்