விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காணிலும் உருப்பொலார்*  செவிக்கினாத கீர்த்தியார்,* 
  பேணிலும் வரந்தரம்*  மிடுக்கிலாத தேவரை,*
  ஆணம் என்றடைந்து*  வாழும் ஆதர்காள்!எம் ஆதிபால்,* 
  பேணி நும் பிறப்பெனும்*  பிணக்கறுக்க கிற்றிரே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வரம் தர - (ஆச்ரயித்தவர்கட்கு) இஷ்டத்தைக் கொடுக்க
மிடுக்கு இலாத - சக்தியற்றவர்களாயுமுள்ள
தேவரை - தேவதைகளை
ஆணம் என்று - சரணமென்றுகொண்டு
அடைந்து வாழும் - அவற்றையடைந்து கெட்டுப்போகிற

விளக்க உரை

தேவதாந்தரங்களினுடைய அயோக்யதைகளை நன்றாகச்சொல்லி, இப்படிப்பட்ட தேவதாந்தரங்களை உதறித்தள்ளிவிட்டு ஸர்வ ஜகத்காரண பூதனான எம்பெருமானை யடிபணிந்து முந்தர்களாய் போகலாகாதா? என்கிறார். காணிலும் உருப்போலார்- அந்தத் தேவதாந்தரங்களைக் காணவே கூடாது; கண்டால் வடிவாவது கண்ணுக்கு நன்றாயிருக்குமோவென்றால், இராது, மஹாகோரமாயிருக்கும்: ‘விருபாக்ஷன்’ என்கிற பெயரேபோராதோ வடிவின் பொல்லாங்கைக் காட்டுரைக்கு. அங்குப் புவியினதளுமான கோலம் காணப்பொல்லாதாயிருக்குமே. வடிவின் பொல்லாங்கு இருக்கட்டும்; சரித்திரமானது காதுகொடுத்துக்கேட்க இனிதாயிருக்குமோவென்னில்; செவிக்கு இனாத கீர்த்தியாய்- தகப்பன் தலையைக் கிள்ளினான்; கபாலதாரியாய் உலகமெங்குந்திரிந்து பிச்சையெடுத்தான்; யாகத்தைக் கெடுத்தான்; மாமனாரை மாய்த்தான்; என்றிப்படிப்பட்ட சரிதைகள் காதுகொண்டு கேட்கக்கூடாதவையிறே. ‘இவற்றையெல்லாம் ஸஹித்துக்கொண்டு வருந்தி ஆச்ரயித்தாலும் இஷ்டத்தை நிறைவேற்றித்தரவல்ல சக்தியாவது உண்டோவென்னில்; பேணிலும் ‘வரந்தர மிடுக்கு இலாத தேவர்- கண்டா கர்ணனுடைய சரித்திரத்தை ஆராய்ந்தால் இது தெரியும். இப்படிப்பட்ட தேவதைகளைச் சரணமாகப் பற்றிநின்ற அறிவுகேடர்களே! நமக்கெல்லார்க்கும் காரணபூதனான பரமபுருஷன் பக்கலிலே ஆதரத்தைப்பண்ணி, ஒருவராலும் அறுக்கப்போகாத உங்களுடைய பிறவியென்னும் துற்றை அறுத்துக்கொள்ள மாட்டீர்களோ?. ‘வரந்தரும் மிடுக்கிலாத” என்றும் பா, முண்டு. ஆணம்- சரணம். அடைந்து வாழும் = அயோக்ய ஸதவங்களையடைந்து பாழாய்ப்போகிறீர்களே! என்று க்ஷேபித்தபடி. ஆகவே, வாழும் என்றது விபரீதலுலக்ஷணை. ஆதர்- குதுரும், அறிவுகேடும்.

English Translation

O People of the world you seek a lowly godling for refuge, -- whose form and fame have no repute, who has no power to give the fruits. But if you wish to boha the cords of birth and death repeatedly, then come to worship Adi Lord, he gives a life in hereafter.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்