விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குரக்கு இனத்தாலே*  குரைகடல் தன்னை* 
    நெருக்கி அணை கட்டி*  நீள் நீர் இலங்கை*
    அரக்கர் அவிய*  அடு கணையாலே* 
    நெருக்கிய கைகளால் சப்பாணி* 
    நேமியங் கையனே! சப்பாணி.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குரை - கோக்ஷியா நின்ற
கடல் தன்னை - ஸமுத்ரத்தை
நெருக்கி - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு - குரங்குகளினுடைய
இனத்தாலே - கூட்டங்களைக் கொண்டு

விளக்க உரை

வாநரப்படைகளைத் துணைகொண்டு கடலில் ஸேதுகட்டின கைகளாலே சப்பாணி கொட்டவேணுமென்கிறாள். குரங்கு + இனம் = குரக்கினம்; வேற்றுமைப் புணர்ச்சியில் மென்றொடர் வன்றொடராயிற்று; “மென்றொடர் மொழியுட் சில வேற்றுமையில் தம்மினவன்றொடர்” என்னுஞ் சூத்திரவிதி அறிக. குரைகடல் - வினைத்தொகை. நீர் - கடலுக்கு ஆகுபெயர். அரக்கர் - ‘ரக்ஷ: ’ என்ற வடசொல் திரிபு.

English Translation

These are the hands rained arrows and destroyed the Rakshasas of Lanka, after building a bridge across the ocean strait with a monkey army. Clap Chappani. O, Lord who wields the discus, clap Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்