விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சண்ட மண்டலத்தினூடு*  சென்றுவீடு பெற்றுமேல்,* 
    கண்டு வீடிலாத காதல்*  இன்பம் நாளும் எய்துவீர்,*
    புண்டரீக பாத*  புண்யகீர்த்தி நும்செவிமடுத்து* 
    உண்டு, நும் உறுவினைத்*  துயருள் நீங்கி உய்ம்மினோ.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வீடு பெற்று - பரமபதத்தை அடைந்து (அவ்விடத்தில்)
மேல்வீடு இலாத - பக்தியின் பயனான கைங்கர்ய
காதல் இன்பம் - ஸுகத்தை நித்தியமாகப் பெற
நாளும் கண்டு - விருப்பமுடையவர்களே!
எய்துவீர் - (முமுக்ஷுக்களே)

விளக்க உரை

இது முதல் மேலேழுபாட்டாலே பரோபதேசம் பண்ணியருளுகிறார். ஸம்ஸாரிகள் தங்களுக்கு ஹிதயமானதை அறிந்து கொள்ளாவிடிலும் நாமாவது அறிவித்து அவர்களை உய்விப்போமென்று திருவுள்ளம்பற்றி, அவர்களுடைய துர்கதியைக் கண்டு பொறுத்திருக்கமாட்டாத க்ருபாவிசேஷத்தாலே உபதேசத்திலே மூளுகிறபடி, அர்ச்சிராதிமார்க்கத்தாலே சென்று நிலைநின்ற புருஷார்த்தத்தைப்பெற விருப்புமுடையீர்! ப்ராப்யமும் ப்ராபகமுமான பகவத் விஷயத்தை ஆச்ரயித்து உங்களுடைய விரோதிகளைப் போக்கிக்கொண்டு உஜ்ஜீவித்துப் போங்கள் என்கிறார் இப்பாட்டில். வடமொழியில் ஸூர்யனுக்கு *** என்று பெயர்; அதில் எந்தேசத்தைக் கொண்டு சண்டன் என்கிறாரிங்கு. காதலின்பம்- காதல் என்று பக்திக்குப் பெயர்: பக்தியின் பலமான இன்பமாவது கைங்கர்யஸுகம். “செவிமடுத்துண்டு” என்றவிடத்து, “செவிக்குணவில்லாதபோது சிறிது, வயிற்றுக்கு மீயப்படும்” என்ற குறள் நினைக்கத்தக்கது.

English Translation

Coursing through the Sun above and entering the highest state, -- those of you who wish to love and live in joy eternally, -- drink with ears the nectar of the holy praise of lotus-feet, then rid yourself of Karmas old and fine a elevate of spirit.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்