விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னு மாமலர்க் கிழத்தி*  வையமங்கை மைந்தனாய்,* 
  பின்னும் ஆயர் பின்னைதோள்*  மணம்புணர்ந்து அதுஅன்றியும்,*
  உன்னபாதம் என்ன சிந்தை*  மன்னவைத்து நல்கினாய்,* 
  பொன்னி சூழ் அரங்கம்மேய*  புண்டரீகன் அல்லையே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மணம் புணர்ந்து - ஸம்ச்லேஷித்து (விளங்குமவனாய்)
அது அன்றியும் - அதுக்கு மேலும்
உன்ன பாதம் - உன்னுடைய திருவடிகளை
என்ன சிந்தை - என்னுடைய நெஞ்சினுள்ளே
மன்னை வைத்து - பொருந்தவைத்து

விளக்க உரை

லக்ஷ்மீபூமிநீளாதேவிகளுக்கு நாயகனாயிருந்துவைத்து உனக்கு அவர்களிடத்திலே அன்பு மட்டம் என்று விளங்கும்படியாக என்னை அங்கீகரித்தருளின மஹோபகாரம் என்னே! என்கிறார். தாமரைப் பூவிலே பிறந்த பெரிய பிராட்டியாரென்ன, பூமிப் பிராட்டியென்ன, நப்பின்னைப் பிராட்டியென்ன இவர்களுக்கு கொழுநனாய் இவர்களோடு திவ்யாநுபவங்களை இடைவிடாது அநுபவிக்கச் செய்தேயும் அவ்வநுபவம் அஸாரம் என்றிட்டு, ஸூரிபோக்யான உன் திருவடிகளை நித்ய ஸம்ஸாரியாயிருக்கிற என்னுடைய ஹ்ருதயத்திலே நொடிப்பொழுதும் விச்லேஷமின்றி வைத்தருளி என் பக்கலுள்ள ப்ரீதி விசேஷத்தைக் காட்டியருளினாய்; உன்னுடைய வைலக்ஷணியத்தைப் பார்த்தாலும் என்னை விஷீகரிக்க ப்ராப்தியில்லை; என்னுடைய புன்மையைப் பார்த்தாலும் விஷயீகரிக்க ப்ராப்தியில்லை; இப்படியிருக்கச் செய்தேயும் வாத்ஸல்யாதிசயமன்றோ இப்படி செய்வித்தது. என்னொருவனை விஷயீகரித்தது மாத்திரமேயோ? காவிரி சூழ்ந்ததென் திருவரங்கத்திலே கிடந்தருளிப் பரமயோக்யமான திவ்யாவயங்களை ஸர்வஜந ஸேவ்யமாகக் காட்டிக் கொடுக்கும் மஹோபகாரகனமாயிருக்கின்றாயிறே. புண்டரீகன் = புண்டரீகம்போன்ற அவயங்கள் நிறைந்து கிடக்கின்றமை பற்றிப் புண்டரீகன் என்று எம்பெருமானையே சொல்லுகிறார்.

English Translation

You became the Lord of Sri and you became the Lord of Bhu, you became the bridegroom of the cowherd-Pinnai lady too! You did place your lotus-feet forever in my thoughts, O Lord! You reside in Ponni-fed Arangam-oor, O Lotus-Lord!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்