விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காரொடுஒத்த மேனி நங்கள்*  கண்ண! விண்ணின் நாதனே,* 
  நீர்இடத்து அராவணைக்*  கிடத்திஎன்பர் அன்றியும்*
  ஓர்இடத்தை அல்லை எல்லை*  இல்லைஎன்பர் ஆதலால்,* 
  சேர்வுஇடத்தை நாயினேன்*  தெரிந்துஇறைஞ்சு மாசொலே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விண்ணின் நாதனே - நித்யஸூரிகட்குத் தலைவனே!
நீர் இடத்து - (நீதி) திருப்பாற்கடலிலே
அரா அணை - திருவனந்தாழ்வான் ஆகிறபடுக்கையிலே
கிடத்தி - பள்ளிகொண்டருளா நின்றாய்
என்பர் - என்று (ஞானிகள்) சொல்லுவார்கள்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “வீடுபெற்றிறப்பொடும் பிறப்பறுக்குமா சொல்” என்று பிரார்த்தித்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! பரவ்யூஹ விபவங்களென்ற நமது நிலைகள் ஆச்ரயிக்கத்தக்க ஸ்தலங்களன்றோ? அவற்றில் ஒரு நிலையைப் பற்றி யாச்ரயித்து நன்மை பெற்றுப்போம்” என்றருளிச்செய்ய; அந்த நிலைகள் அடியேனுக்கு ஆச்ரயனார்ஹமான நிலங்களல்ல; மிகவும் நிஹீகநனான அடியேன் ப்ரதிபத்திபண்ணி ஆச்ரயிக்கத்தக்கதோரிடத்தை அருளிச் செய்யவேணுமென்கிறார். ஓரிடத்தை அல்லை= இன்னஸ்தலமென்று குறிப்பிடக்கூடிய ஓரிடத்தை இருப்பிடமாகவுடைந்தாயிருக்கின்றாயில்லை. ஒருவர் கண்ணுக்கும் புலப்படாதபடி அந்தர்யாமியாய் ஸர்வ வஸ்துக்களிலும் வ்யாப்தனாய் இராநின்றாய் என்றபடி. எல்லையில்லை என்பர் = தஹாவித்யை,சாண்டில்பவிதத்யை, வைச்வாநரவித்யை உபகோஸலவித்யை என்றாப்போலே சொல்லப்படுகிற வித்யைகளுக்கு எல்லையில்லாமையாலே அவற்றில் சொல்லப்படுகிற ஆச்ரணிய ஸ்தலங்கட்கும் எல்லை என்கை. ஆகையால் = இப்படி, பரமபதம் தேசத்தால் விப்ரக்ருஷ்டமாய், க்ஷீராப்தி அதிக்ருதாதிகாரமாய், அந்தர்யாமித்வம் ப்ரதிக்கே ட்டாததாய் ஆச்ரயணீயஸ்தலம் அபரிச்சேத்யமாயிருக்கையாலே என்றவாறு. அயோக்யனான அடியேன் “இது நமக்கு ஆச்ரயணார்ஹமான ஸ்தலம்” என்று ஓரிடத்தை நிஷ்கர்ஷித்து ஆச்ரயித்து உஜ்ஜீவித்துப்போம்படியாக ஓரிடத்தைக் காட்டிக்கொடுக்க வேணுமென்று தலைக்கட்டுகிறார். ஓரிடத்தை = ‘ஓரிடத்தன்’ என்பதன் முன்னிலையுருவம்.

English Translation

O Lord the hue of laden cloud, O Lord of gods and dear to us! Through they say you lie in their on snake in ocean-deep alone, you defy the thoughts of all and all the bounds of space and time. So tell me where I am to see you, Lord so dear as eyes to me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்