விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தோடுபெற்ற தண்துழாய்*  அலங்கல்ஆடு சென்னியாய்,* 
    கோடுபற்றி ஆழிஏந்தி*  அஞ்சிறைப் புள்ஊர்தியால்,* 
    நாடுபெற்ற நன்மைநண்ணம்*  இல்லையேனும் நாயினேன்,* 
    வீடு பெற்று இறப்பொடும்*  பிறப்புஅறுக்கு மோசொலே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

 
தோடு பெற்ற - இதழ்களையுடைய
தண் துழாய் - குளிர்ந்த திருத்துழாயினாலாகிய
அலங்கல் - மாலையானது
ஆடு - விளங்கப்பெற்ற
சென்னியாய் - திருமுடியையுடைவனே!

விளக்க உரை

அநாதிகாலம் இழந்தொழிந்த நான் இனியாகிலும் உய்யுமாறு அருள்செய்ய வேணுமென்கிறார். நாடுபெற்ற நன்மையாவது- திருத்துழாய் மாலையும் திருமுடியுமாக விளங்கநின்ற மையத்தையும் திவ்யாயுதபாணியாய்ப் பெரிய திருவடியின் மீதேறி எழுந்தருளின ஸமயத்தையும் அநபவிக்கப்பெற்ற நன்மை. அந்த நன்மையை அடியேன் பெறாதிருந்தாலும் இனியாகிலும் இந்த ஸம்ஸாரபந்தம் அறும்படியான பாக்கியம் பெற்று நித்யஸூரிகளுடைய திருவோலகத்திலே புக்குத் தினைக்கும்படியாக அருள்செய்ய வேணுமென்று வேண்டுகிறார்.

English Translation

O Lord who wears the Tulasi wreath with nectar-flowing floral beads! O Lord who holds a conch and discus, Lord who rides the king of birds! O Lord, what through this lowly self has not the gain of worldly wealth, pray tell me how to reach your feet and cut the bonds of birth and death.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்