விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வேறுஇசைந்த செக்கர்மேனி*  நீறுஅணிந்த புன்சடை,* 
    கீறுதிங்கள் வைத்தவன்*  கை வைத்தவன் கபால்மிசை,*
    ஊறு செங்குருதியால்*  நிறைத்த காரணந்தனை* 
    ஏறு சென்று அடர்த்த ஈச!*  பேசு கூசம்இன்றியே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கை வைத்த - தன்கையில் வைத்துக் கொண்டிருந்த
வல் கபால் மிசை - வலிதான கபாலத்தை
ஊறுசெம் குருதியால் - உள் திருமேனியிலே ஊறா நின்றுள்ள சிவந்த ரத்தத்தாலே
நிறைந்த காரணம்தனை - நிறைந்த காரணத்தை
பேசு - அருளிச் செய்யவேணும்.

விளக்க உரை

அரசுடைய கபாலத்தை நிறைந்தது எதற்காக? சொல்” என்று கேட்பதற்குக் கருத்து- நீ ஸர்வஸ்மாத்பரனாய் அவன் உன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவனாயிருக்கையாலே அவன் யாசிக்கவும் நீ அவனை அநுக்ரஹிக்கவும் நேர்ந்ததென்று நாங்களெல்லாரும் நினைத்திருக்கிறாய்; இப்படி உனது பரத்வத்தை வெளியிடுதல் தவிர வேறு காரணமுண்டாகில் அருளிச்செய்யவேறும் என்கை. “கூசமின்றியே பேசு” என்றாவது, “கூசமின்றியே ஏறு சென்றடர்த்தவீச!” என்றாவது அந்வயிக்கலாம். “ஏறு சென்றடர்த்தவீச! பேசு” என்ற ஸம்போதந் ஸ்வாரஸ்யத்தால்- நீ சாஸ்த்ரத்துக்கு வசப்படாத ஜந்மத்திலே பிறந்து ஏழு கோ (ஹோ) ஹத்யை பண்ணச் செய்தேயும் ஈச்வரத்யம் நிறம் பெறநின்றாய்; ருத்ரன் தன் ஈச்வரத்வத்தால் வந்த மேன்மை குலையாமல் நிற்க செய்தேயும் பாதகியானான்; அந்தப் பாதகத்தை உனது திருவருளால் போக்கிக் கொண்டான்; இந்த நெடுவாசியை அறியவல்லாரார்; என்பதாக உட்கருத்துத் தோனறும். வேறு இசைந்த செக்கர் மேனி = எம்பெருமான் ஸர்வரக்ஷகனாயிருக்குந் தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கடல்போன்ற அழகிய வடிவம் அமைந்தால், சிவன் ஸர்வஸம்ஹாரகனாயிருக்குந்தன்மைக்கு ஏற்ப அவனுக்குக் கோபாவேச ஸூசகமாய்ச் செந்நிறமான உடல் அமைந்ததாம். கபால்- ‘கபாலம்’ என்ற வடசொல்லின்குறை. எவ்வளவு ப்ரயாஸப்படும் அக்கபாலம் கையைவிட்டு நீங்காதிருந்ததனால் வன் கபால் எனப்பட்து.

English Translation

The Lord Siva has countenance of red hue, ashes and the mat; He wears a crescent-moon and bears a skull for begging bowl in hand. You filled the skull with lotus blood and rid him of his long despair. O Lord who battled seven bulls, pray tell me why you did this act?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்