விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆயன்ஆகி ஆயர்மங்கை*  வேய தோள் விரும்பினாய்,* 
    ஆய! நின்னை யாவர்வல்லர்*  அம்பரத்தொடு இம்பராய்,*
    மாய! மாய மாயைகொல்*  அதுஅன்றி நீ வகுத்தலும்,* 
    மாயமாயம் ஆக்கினாய்*  உன் மாயம்முற்றும் மாயமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாய ! - ஆச்சரியபூதனே. (நீ)
அயன் ஆகி - இடப்பிள்ளையாய்ப் பிறந்து
ஆயர் மங்கை - இடைப்பெண்ணான நப்பின்னைப்பிராட்டியினுடைய
வேய தோள் - வேய்போன்ற தோள்களை
நின்னை ஆயவல்லர் - உன் ஸ்வரூபத்தை ஆராய்ந்து அறியவல்லர்? (யாரும் அறிய கில்லார்.)

விளக்க உரை

எம்பெருமானே! நீ உகந்தாரைத் தத்ஸஜாதீயவான்ய வந்தவதரித்து ஸ்வரூபாநுரூபமாக ரக்ஷித்தருளும்படியையும்,விமுகரான ஸம்ஸாரிகளை ஸங்கல்பத்தாலே கர்மாநுகூலமாக ரக்ஷித்தருளும்படியையும் அநுஸந்திக்கப்புகுந்தால் பரிச்சோதிக்க முடியாத ஆச்சர்மாயிருக்கிறதே! என்கிறார். (நீ வகுத்தலும் இத்யாதி.) ஸம்ஸாரிகளுடைய இழவைக்கண்டு இரங்குமவனான நீ அவர்கள் உன்னையடைந்து உய்வதற்காக அவர்கட்கு நீ கரணகளேபரங்களைக் கொடுத்திருக்கச் செய்தேயும் அவர்கள் அவற்றைக்கொண்டு நன்மை தேடிக்கொள்ளாமல் விஷயாந்தரப்வணராய் அழிந்துபோக, ‘இவர்கட்கு இனி ஸம்ஹாரமே நல்லது’ என்று திருவுள்ளம்பற்றி அவர்களை ப்ரக்ருத்யவஸ்தையிலே கொண்டு நிறுத்தினாய்; உன்னுடைய மாநஸவயாபாரரூபமான ஸங்கல்பஜ்ஞாநமடங்கலும் ஆச்சர்யகரமாயிருக்கினற்து காணென்கிறார். நல்வழி தவிர்ந்து தீயவழியிற்சென்ற ஸம்ஸாரிகளை ஸம்ஹரிப்பதும் கர்மாநுகுணமான ரக்ஷணமென்று திருவுள்ளம்.

English Translation

You came as cowherd-lad and sought bamboo-shoulder-Nappinnai, O Lord now who can fathom you on Earth, in all the sky above? O Maya Lord, O Wonder-Lord O Wonder of the wondrous! The world you made and filled in it, is Maya-filled and Maya-made!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்