விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புட்டியிற் சேறும்*  புழுதியும் கொண்டுவந்து* 
    அட்டி அமுக்கி*  அகம் புக்கு அறியாமே* 
    சட்டித் தயிரும்*  தடாவினில் வெண்ணெயும் உண்* 
    பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி* 
    பற்பநாபா! கொட்டாய் சப்பாணி. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புட்டியில் - திருவரையிற் படிந்த
சேறும் - சேற்றையும்
புழுதியும் - புழுதி மண்ணையும்
கொண்டுவந்து - கொணர்ந்து வந்து
அட்டி - (என்மேல்) இட்டு

விளக்க உரை

கண்ணன் புழுதியில் விளையாடும்போது, உடம்பில் வியர்வை நீருண்டாக, அவ்வேர்வை நீரால் நனைந்து புழுதிபடிந்த இடம் சேறாகவும் நனையாதவிடம் புழுதிமண்ணாகவும் இருக்கும். அப்படியே வந்து தன் மேலணைந்தால் அந்தச் சேறும் புழுதியும் தன்மேலும் படிந்துவிடுமாதலால் ‘அட்டி அமுக்கி’ எனப்பட்டது. பட்டிக்கன்றே - பட்டி தின்றுதிரியும் கன்றுபோலே நெய் பால் தயிர்களைக் களவினால் தின்றுதிரிவதையே பொழுதுபோக்காக வுடையவனே! என்றவாறாம். பற்பநாபன் – வஉநா

English Translation

O, My little Calf? Smirching the dust and grime of your frame on me you slip inside stealthily and eat all the pots ‘curds and pails‘butter. Clap your hands, Chappani! O, Padmanabha, clap Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்