விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆதிஆதி ஆதி நீ*  ஒர்அண்டம் ஆதி ஆதலால்,* 
    சோதியாத சோதிநீ*  அதுஉண்மையில் விளங்கினாய்,*
    வேதம்ஆகி வேள்விஆகி*  விண்ணினோடு மண்ணுமாய்* 
    ஆதிஆகி ஆயன்ஆய*  மாயம்என்ன மாயமே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேதம் ஆகி - வேதங்கட்கு நிர்வாஹகனாய்
வேள்வி ஆகி - யஜ்ஞ்களாலே ஆராத்யனாய்
விண்ணினோடு மண்ணும் ஆய் - உபய விபூதிக்கும் நியாமகனாய்
ஆதி ஆகி - இப்படி ஸர்வகாரண பூதனாயிருந்து வைத்த
ஆயன் ஆய மாயம் - இடையனாய்ப் பிறந்தாமயம்

விளக்க உரை

உலகத்தில் ஒரு காரியம் பிறக்கவேணுமானால் அதற்கு மூன்று வகையான காரணங்கள் உண்டு: உபாதாநகாரணம், ஸஹகாரிகாரணம் , நிமித்தகாரணம். குடம் என்கிற ஒரு காரியம் பிறக்க வேண்டுமிடத்து மணல் உபாதான காரணமென்றும், சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரிகாரணமென்றும், குயவன் காலம் அத்ருஷ்டம் முதலியவை நிமித்த காரணமென்றும் கொள்ளப்படும்; அப்படியே ஜகத்தாகிற காரியத்துக்கு மூவகைக் காரணங்கள் அமையவேண்டுமே. அவற்றில் எம்பெருமான் எவ்வகைக் காரணமாகிறானென்றால், மூவகைக் காரணமும் இவனொருவனே யென்கின்றார் ஆதியாதியாதிநீ என்று. ஆதி என்றது காரணம் என்றபடி. ஆதிசப்தத்தை மூன்று தடவைப் பிரயோகித்ததனால் மூவகைக் காரணமும் நீயே என்றதாகிறது. ஓரண்டமாதி = அண்டமென்றது ஜாத்யேக வசநமாகக் கொள்ளத்தக்கது. அண்டராசிகளை ஸ்ருஷ்டித்து அவற்றுள் பிரமன் முதல் எறும்பளவான ஸகல பதார்த்தங்களையும்ஸ்ருஷ்டித்து அவற்றுக்கு அந்தர்யாமியாயிருக்கிறாய் என்றபடி. இவ்விடத்தில் ஆதி என்றது- ஆகின்றாய் என்னும் பொருளையுடையதான நிகழ்கால முன்னிலை யொருமைவினைமுற்று. ஆ- பகுதி; தி- விகுதி. ஆதலால் சோதியாத சோதி நீ = கார்யவர்க்கங்களிலே ஒருவனாயிருந்தால் நீ பரஞ்சோதியா அன்றா என்று சோதித்துப் பார்க்க வேண்டியதாகும்; அப்படியன்றியே ஸகலஜகத்காரணபூதனாக அமைந்தயாகையினால் ஜ்யோதிச்சப்த வாச்யன் நீதான் என்று எளிதாக நிர்ணயிக்கலாயிராநின்றது என்படி. ஜகத்காரணபூதமான பொருள் எதுவோ அதுதான் உபாஸிக்கத் தகுந்ததென்றும் அதுதான் பருங்சோதியென்றும் தோந்தங்களிற் கூறப்பட்டிருத்தலால் உன்னைப் பற்றி சோதிக்க வேண்டிய வருத்தமில்லையென்கிறார்.

English Translation

The Cause-of causes Lord above, you became the earth and all. The light-of light revealed in all the Vedas of the truthful word! You became the Vedic Earth and Vedic Sacrifice above. Then you became the cowherd-Lord, the wonder-child of Gokulam!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்