விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காலநேமி காலனே!*  கணக்குஇலாத கீர்த்தியாய்,* 
    ஞாலம்ஏழும் உண்டுபண்டு ஒர்*  பாலன்ஆய பண்பனே,*
    வேலைவேவ வில்வளைத்த*  வெல்சினத்த வீர,*  நின்- 
    பாலர்ஆய பத்தர் சித்தம்*  முத்திசெய்யும் மூர்த்தியே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாட்டு - மின்னறதெயிற்றரக்கன் வீழ
ஓர் பாலன் ஆய - ஒரு சிறுகுழந்தைவடிவமெடுத்த
பண்பனே! - ஆச்சர்யபூதனே
வேலைவேவ - கடல்நீர் வெந்து போம்படி
வில்வளைத்த - வில்லை வளைத்த.

விளக்க உரை

காலநேமி என்பவன் இராவணனுடைய மாதுலன்; இவன், தாரகாசுர யுத்தத்தில் எம்பெருமானாற் கொல்லப்பட்டவன். வேலை- கடற்கரைக்குப் பெயர்; இலக்கணையால் கடல்நீரைக் குறிக்கும். வெல்சினந்தவீர! = சிலருடைய கோபம் காலக்ரமத்தில் தன்னுடையே சாந்தமாவதுண்டு; அங்ஙனன்றியே ஸமுத்ரராஜன்மீது பெருமாளுக்குண்டான கோபம் வெல்சினமாய்த்து; வென்றாலன்றித் தீராத பாதச்சாசையிலே ஒதுங்கிவர்த்திக்கிற பக்தர்கள் என்கை. முத்திசெய்தல்- வேறு விஷயங்களில் ஆசையற்றதாகச் செய்தல். மூர்த்தி- ஸ்வாமி; திவ்யமங்கள விக்ரஹமாகவுமாம்; வடிவழகைக் காட்டித் தன்பக்கல் ஆழங்காற்படுத்திக் கொள்ளுமவனே! என்றவாறு.

English Translation

O Lord of countless qualities, O Kalanemi-killer Lord! O Lord who swallowed all the worlds, O Child asleep on Banyan leaf! In anger, Lord, you shot the bow whose arrow dried the ocean-deep. You make devotees come to you with love and sing your praise in joy!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்